பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 247 திருவரங்கத்துத் திருமால்பாற் பெருகிய காதலுடைய ராய் அப்பிரானை த்தரிசித்து அவன் திருமுற்றத்தடியார் குழாத்துள் வாழ்தலையே விரும்பி உலகவாழ்வில் நசையற்றிருந்தவ ரென்றும், இவரது உலகப் பற்றின்மைக்குக் காரணமானவர் திருமாலடியார்களே என்று, அவர்கள்பால் அரசர்க்கு வெறுப்புண்டாக்கக் கருதி, அரண்மனையிற் களவுபோன அரதனமாலை யொன்றைக் கவர்ந்தவர் அவ்வடியாரே என்று அமைச்சர்கள் ஒருகாற் சார்த்திய பழியை இவ்வாழ்வார் ‘பரமனடியார் ஒருபோதும் அது செய்யார்' என்று பாம்புக் குடத்திற் கையிட்டுச் சூளுறவு செய்து அவ்வடி யார் பெருமையை நிலைநாட்டினர் என்றும், இராம பிரானது திவ்வியசரிதமே செவிக்கினிய செஞ்சொல்லாய் மடுத்தனுபவித்துக் கொண்டு அப்பிரானிடம் விசேடப் பிரதிபத்தி புரிந்துவந்தவர் இவர் என்றும், பின் தம்பெரு வாழ்வில் வெறுப்பு மிகுதியுடையராய் அரசு துறந்து அணியரங்கன் திருமுற்றத்தை அடைந்து, அந்நகர்ப் பெருமானையும் ஆங்குள்ள அவனது தொண்டர் குழாத்தையும் கண்டுகளித்து அவ்வடியாருள் ஒருவராக விளங்கித் திருநாடலங்கரித்தவர் என்றும் இவரது வைபவம் கூறப்பட்டுள்ளது. ஆரங் கெடப்பர னன்பர் கொள் ளாரென் றவர்களுக்கே வாரங் கொடுகுடப் பாம்பிற்கை யிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்தசெங் கோற்கொல்லி காவலன் வில்லவர் கோன் சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே என்று, ஸ்ரீமந் நாதமுனிகளின் பிரசிஷ்யரான மணக்கால் நம்பிகள் திருவாக்கும் இவ்வாழ்வார் வரலாற்றைச் சுருங்கக்கூறுதல் காண்க.