பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

250 ஆழ்வார்கள் 'காலநிலை பெருமாள் என்ற மூன்று திருநாமங்களும் சமகாலத்தவர் களே என்று நாம் ஒருதலையாகக் கருதத் தடையில்லை. இனி, திருமங்சை.மன்னன்( பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார்மன்னர் மன்னர் தாம்பணிந்தேத்தும், வரனே என்று, தங்காலத்திருந்த தமிழ்ப் பேரரசர்கள் திருமாலடியராக விருந்த செய்தி குறித்தலை மேலே விளக்கியுள்ளேன் (பக், 206-3). இவருள்ளே , பூழியன் என்பான் சேரனாவன். இங்ஙனம் பேரடியராகத் திருமங்கையார்நாளில் விளங்கிய சேரர் பெருந்தகை, இக்குலசேகரப்பெருமாள் என்றே மேற்கூறியவற்றுக் கியைய நாம் கொள்ளக் கூடியதன்றோ? இக் கொள்கையை வலியுறுத்த மற்றொரு சிறந்த சான்றும் உண்டு , மேலே, 138-ம் பக்கத்துக்காட்டிய பல்லவ வமிசாவளியில், 6-ம் எண்ணுக்குரியவனும், பரமசிவபத், தனுமான இராஜசிம்மன் காலத்தே சுந்தரமூர்த்தி நாயனார் விளங்கியவரென்பது, 202-ம் பக்கத்திற்கண்ட் நீண்ட கீழ்க்குறிப்பால் தெளிவாக விளங்கும். சுந்தரமூர்த்திகள் சிவனடிமைத் திறத்துச் சிறந்து நின்ற காலத்தே, கேரள வேந்தரான சேரமான் பெரு மாணாயனார் வாழ்ந்தவர் என்பது பெரிய புராண வரலாறு கும். சேரர்குடியில் உதித்துப் பெருமாக் கோதையார் என்ற பெயர் பெற்றிருந்த இவ்வேந்தர் திருவஞ்சைக் களத்துச் சிவபிரான்பால் வைத்த பத்திமிகுதியால் ஆங்குச் சிவதொண்டு புரிந்து வந்தனர் என்றும், அக் காலத்துச் சேரநாட்டை ஆட்சிபுரிந்துவந்த பொறையன் ஆகிய சேரன் உலகப்பற்றற்றுத் தன் அரசாட்சியைத் துறந்து தவம் பூண்டனன் என்றும், அதனால் ஆட்சி