பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

252 ஆழ்வார்கள் காலநிலை திருமங்கைமன்னனுக்குச் சமகாலத்தவராகவும் தம்மரசு துறந்தவராகவும் தெளியப்பட்ட நம் குலசேகரப் பெருமாள் என்றே நாம் கொள்ளக்கூடியதன்றோ? இப் பெருமாள், தம் திருமொழியின் 2, 3 ஆம் திருப்பதி கங்களிலே< கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்தே இன்பமருஞ் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன் *: வானாளு மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தங் கோனாகி வீற்றிருந்து கொண்டாடுஞ் செல்வறியேன்" * மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளுமிவ் வையந் தன்னொடுங் கூடுவ தில்லையான்" என்று இவ்வாறே தம் துறவுநிலையைப் பலவிடங் களினும் பாடியருளுதல் அறியத்தக்கது. அரசுதுறந்த சேரவேந்தரை இன்னசமயத்தவர் எனச் சிறப்பியாது ' அரசன் தரணிநீத்துத் தவஞ்சார்ந்தான்' என்று பொதுப் பட வே சேக்கிழார் கூறிச்செல்லுதலும் ஈண்டு நோக்கற் பாலது. இவற்றால், சேரமான்பெருமாளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் நம் குலசேகரப்பெருமாள் என்றே கருதற்குப் பெரிதும் பொருத்த முண்மை கண்டுகொள்க. இவ்வாழ்வார் தம்குமாரர்க்குப் பட்டங்கட்டிவிட்டுத் துறவு பூண்டனர் என்று திவ்யசூரிசரித முதலியவை கூறுகின்றன. பின்பட்டமெய்துதற்கு உரிமையுடைமை யால் சேரமான்பெருமாளே புத்திரராக இவ்வாறு உப சரித்துக் கூறப்பட்டனர் என்று நாம் கொள்ளற்பாலது. இங்ஙனமன்றேல், திவ்யசூரிசரித வரலாற்றுக்கு இயை யப் பெரியபுராணச் செய்தியை அமைத்துக்கொள்ளுதல் * வேண்டும்.