பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

274 ஆழ்வார்கள் காலநிலை சரித்திரத்துள் எழுதியுள்ளார். இது பொருளாலும் சந்தர்ப்பத்தாலும் சிறிதும் பொருத்தமற்றதாகும். கண்ணபிரானைத் தன் திருவயிறு வாய்க்கப் பெற்றும், மாமனான கஞ்சனுக்கு அஞ்சிக் கோகுலத்து ஒளித்து வளர்ந்த அப்பிரானது பாலசரிதைகளைக் கண்டுகளிக்கும் பாக்கிடம்பெறாத தேவகி, தன் திருக் குமரன் கம்ஸவதம் செய்துவிட்டுத் தன்னிடம் வரக் கண்டுருகி, அப்பெருமானது இளமைச் செய்திகளை நினைந்து மூவ்வொன்றாக எடுத்துக்கூறிப் புலம்பிய தன் மையை ஆழ்வார் கொண்டுமொழிந்தனவற்றுள் இஃது இறுதிப் பாட்டாகும். இதற்கு-" மல்லரையும் அவரையேவிய மதுரை மாநகர்க்கு அரசனான கஞ்சனையும் வீரசுவர்க்கம் அடையச் செய்து விட்டுத் தன்பால்வந்த கண்ணனது செயல்களைக் கண்டு தேவகி புலம்பியதை' என்பதே நேர்பொருளாகும். மேற்பாசுரங்களிற் கூறிப்போந்த தேவகி புலம்பல் இன்னது பற்றியது என்பதனை விளக்குவதற்காகவே ஆழ்வார் இவ்வாறு விசேடித்துக் கூறுகின்றார் என்பது நோக்குவார்க்கு எளிதின் விளங்கும். மல்லரையும் கஞ்சனையும் ஒரே சந்தர்ப்பத்தில் கண்ணன் கொன்றிட்ட செய்தியை" மல்லையட்டு...கஞ்சனுக்கு நஞ்சானானை (பெ. தி. 2, 10, 7) “ மல்லடர்த்துக் கஞ்சனைக் காய்ந்தான்" (ஷை, 6, 7, 5) - மல்லொடு கஞ்சனுந் துஞ்சவென்ற" (ஷ, 11, 2, 3) 1. The History of Sri Vaisnavas, p 22