பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

286 ஆழ்வார்கள் காலநிலை கெடுத்துரைப்பாராயினர். இவ்வாறு ஆட்செய்யும்படி ஆழ்வார் வேண்டியதற்கு, உலகத் தொடர்புமிக்க அப் புலவர்கள் செவி சாய்க்கவும் கூடியவரோ? நிலையற்ற பொருளை விரும்பி, அரசர் தலைவர்கள் மேல் தம் அரிய வாக்கைக் கொட்டி இரந்துண்ணும் அவரது வாழ்வு, இவர்க்கு இரக்கமும் துக்கமும் விளைத்தது. மானிடரைப் பாட்டுடைத் தலைவராக்கி அகப் பொருள்களமைய அருங்கவிகளைப் பாடி வரிசை பெற்று வாழ்வதே அக் -காலப் புலவர்கள் கொண்டிருந்த பொதுமுறை. அம் முறையை மாற்ற முயல்வோர் அவர் தம் வினையே 'கெடுப்பவராய் அவர் பகைமைக்கும் உரியவராவர். ஆயினும் அப்பகைமை விளைவதனையும் பொருட் படுத்தாமல் இவர், “ சொன்னால் விரோதமிது ஆயினும் சொல்லுவன் கேண்மினோ என்னாவி லின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன் (3-9-1) என்று தொடங்கிப் பற்பல நன்மொழிகளை அவர் பொருட்டுக் கூறுதல் குறிப்பிடத் தக்கது. அவற்றுள் "வம்மின் புலவீர் நும் மெய்வருந்திக் கைசெய் துய்ம் மினோ' என்று தொடங்கும் பாசுரம் அற்புதம் வாய்ந்தது அகப்பொருள் துறைகளை, இழிவான விஷய காமம் ஆகவே கொண்டு மானிடர் தலைவராகப் பாடிவந்த பழைய புலவர் மரபை மாற்றி, அவற்றை உத்தமமான பகவத் விஷய காமம் ஆக்கிப் பரமனிடம் காதல் பெருக பாடும் முறைக்கு வழி கற்பித்தவருள் நம்-ஆழ்வாரே தலை சிறந்தவரெனலாம். புருடோத்தமரான பகவானைத் தலைவனாகவும் தம்போன்ற சீவான்மாவைத் தலைவி யாகவும் கொண்டு அகப்பொருள் நயங்கள் திகழும்படி