பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1302 ஆழ்வார்கள் காலநிலை -என்ற பாசுரங்க ளிரண்டு, இறுதி, முற்றுகரமாய் முடிந்த வெண்பாக்களுக்கு உதாகரிக்கப் பட்டு, பொய்கையார் வாக்கு' என்ற குறிப்பும் தரப்பட்டுள்ளன .இவற்றுள் முதற்பாட்டு"எளிதி லிரண்ட்டியுங் காண்பதற்கென் னுள்ளம் தெளியத் தெளிந்தொழியுஞ் செவ்வே--களியிற் பொருந்தா தவனைப் பொரலுற் றரியா யிருந்தான் திருநாம மெண்" * என்ற முற்றுகர வீறாகவின்றியே இப்போது பாடம் வழங்குகின்றது. இஃதன்றி, இப்பாட்டு, அவ்விருத்தி யுரையுள், “எளிதி னிரண்டடியுங் காண்பதற்கென் னெஞ்சே தெளிதிற் றெளிந்துரைப்பன் செவ்வே-அளிகள் பொருந்தா ரிரணியனைக் கொல்லுற் றரியாய் இருந்தான் றிருநாம மெண்ணு என்று பாடபேதம் பலகொண்டு உள்ளது. பாலன்றன துருவாய்' என்ற பொய்கையார் பாசுரம் முற்றுகர வீறாக இப்போதும் ஓதப்படுவதாம். அதனில் (ஆலிலை பயின் மேலன்று நீ கிடந்தாய்', 'வேலை சூழ்நீரதோ' என்பன தவிர, மற்றவை ஒற்றுமை கொண்டுள்ளன. இப்பாசு --ரங்களை உதாகரித்த பாப்பருங்கலவிருத்திகாரர் 11-ஆம் நூற்றாண்டினராகத் தெரிகின்றார். இதனால், மணிப் பிரவாள வியாக்யானங்கள் அதிகமாக நடை யாடாத காலத்தே இப்போது ஓதுமுறையினும் வேறாக வழங்கிய பாடங்கள் அருளிச் செயல்கட்கு அமைக் திருந்தன என்பது தெரியலாம்.இப் பழம்பாடங்களிலும் நயமுடை யன கொள்ளத்தகும். 10. இயற்பாவில், பூதத்தாழ்வார் அருளிய இரண் ட்டாந்திருவந்தாதி, 53-ஆம் பாசுரம், பின்வருமாறு: