பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

310) ஆழ்வார்கள் காலநிலை என்ற பாடம் அவர்காலத்து வழங்கியதுபோபத தோற்றுகின்றது. "கதையின் பெரும் பொருளாங் கண்ணு' என்ற பூதத்தார்பாசுரமும் ஒப்பிடத்தக்கது. இனி, பாட்டும் உரையும்' என்ற பாடம் தமிழ் முறைக்குப் பெரிதும் ஏற்பதாகும். கத்தியரூபமும் பத்தியரூபமுமான காவ்யங்கள் என்பது பொருள் யாப்பின்வகைகளாகப் பாட்டுரை நூலே என்று தொல்காப்பியனார் கூறுகின்றார் (பொருளதி. 391). பெருங்கதை, சிந்தாமணிபோல்வன பாட்டு நூல், பெருந் தேவனார்பாரதம், தகடூர் யாத்திரை போல்வன உரை நூல். 'பாட்டு முரையும்' என்ற தொடர் இக்கருத்தில் வழங்குவதென்பது “இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்றம்-மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள என்று, ஏழிற்கோமானை ஔவையார் பாடிய அங்கத் வெண்பாவாலும் அறிக (தொல், பொருளதி. 471, பேரா; தமிழ்நா...தை). பாட்டு முரையும்' என்ற இப்பாடம், பெரியவாச்சான் பிள்ளை கொண்டதன்று என்று சொல் 1, 'பாட்டு முறையும் படு-பாட்டும் முறையுமாய் அமைந்த கதையில்' -புராணங்களிற் சொல்லப்பட்ட பல் பொருள்- பரந்த அர்த்தங்கள்'- என்று பிரித்துப் பொருள் கொள்க, பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானப்படி, இப் பாடம் கொள்ளப்பட்டது. 2, உரை நூல் என்றது, முழுதும் வசனமாக வன்றிப் பெரும்பான்மை உரையும் சிறுபான்மை பாட்டும் உள்ள உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளை என்க,