பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

312 ஆழ்வார்கள் காலநிலை என்று அருளிச்செய்தார். இப்பெரியார் தமக்கு முன்பு வழங்கிய 'இருகலையுமெய்துவர்' என்ற பாடத்தைத் தழுவி, பகவத்விஷய காமமே தன் உத்தேசியமாகத் தலைவி கொண்டவளாதலால், அக்காமத்தை அடைந்த வர்கள் அதன் கலாமாத்ரமான ( = ஏகதேசமான) அறம் பொருள்களையும் அடைந்தவர்களாவர் என்ற கருத்தில் அவள் கூறியதாக எழுதியபொருள் போற்றத் தக்கதே. இதன்படி, " அவற்றினிடை- அறம் பொருளின் பங்கள் தம்மில்; அதனை எய்துவார்-அக்காமத்தை அடைபவர்; இருகலை-அக்காமத்துக்குக் கலா மாத்ரமான (ஏகதேசங்களான) தர்மார்த்தங்கள்” என்று பொருள் கொள்க. இனி, நடுவண தெய்தின் இருதலையும் எய்தும்” என்று தமிழர் சொல்லு கிறபடியே சொல்லுகிறார் அன்று' என்று பக்ஷாந்தர மொன்றையும் கூறி அப்பெரியார் மறுத்தெழுதுவதால், இருதலையுமெய்துவர்' என்ற பாடமும் அவர்க்கு முன் வழங்கியதாகவே தெரிகின்றது. இத்தமிழர் கூற்று "வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலையு மெய்தும் நடுவண தெய்தாதா னெய்தும் உலைப்பெய்து அடுவது போலுந் துயர் ' என்ற நாலடியார்ப் பாட்டில் உள்ளது. (ஈண்டு, மூன்றில் -அறம் பொருளின்பங்களில்; நடுவணது-இடையிலுள்ள பொருள்; இருதலை-அறம் இன்பங்கள், இருதலைக் கொள்ளி' என்ப.) இம் மேற்கோளின்படி, வையத்து மன்னிய மூன்று' என்பதனோடு இம்மடலிலுள்ள பாரோர் சொல்லப்பட்ட