பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 321) என்ற முன்னோர் தொடர்களை நோக்குக. பஞ்சுதல் என்று ஒரு வினையின்மையாலும், பண்பீறன்றிப் பெயரீறுகள் இவ்வாறு திரிதலருமையாலும், வ்யாக்யானத்துக்கும் இப்பாடம் விரோதமாகாமையாலும் திருத்தப் பாடமே பொருத்தமாதல் அறியலாம். 'பஞ்சிமெல்-லடிப்பின்னை. திறத்து-முன்னாள்' என்று விருத்தச்சீரோசை பிரிவன வாம். பஞ்சி எனினும் பஞ்சு எனினும் ஒக்கும். இனி, 'பஞ்சியன்மெல்லடி' என்பது பழம்பாடமாயினும் ஆகலாம். இப்பாசுரத்தின் ஈற்றடியின் முதற்சீரிலும் “செஞ்சுடரவெயில்' என்று, ஓசை நயம்பெறத் திருத்தங் கொள்க. 20. ஷை திருமொழி 6-6-4 ஆம் பாசுரத்தில்வெங்கண்மா களிறுந்தி விண்ணி ஏற்ற விறன்மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே . என்று வீரவேந்தனான சோழன் செங்கணானது வெற் றிச்செயலைச் சிறப்பிக்கின்றார் திருமங்கைமன்னன், இவ் வேந்தனது வீரப் பெருமைகள் அக நானூறு புறநானூ றுகளிலும் களவழிநாற்பதிலும் கூறப்பட்டுள்ளன. இ.வனைப்பற்றிய அவ்அடிகளில், விண்ணி ' என்றசொல் வெண்ணி என்று திருத்தம் பெறற்குரியது. வெண்ணி என்பது தஞ்சாவூர்க்குக் கிழக்கே 15 மயிலில் ரயில்வே ஸ்டேஷமாகவும், தேவாரப்பாடல் பெற்றதாகவும் உள்ள திருவெண்ணி, கோயில் வெண்ணி என்று வழங்கப் படும் தலமாகும். "வெண்ணித் தொள்னகர் மேயவெண் டிங்களார் என்பது அப்பர் வாக்கு, வெண்ணிக் கூற்றத்து வெண் ணியே” என்ற தேவாரத்தொடரால் இது முன்பு ஒரு 21