பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

322 ஆழ்வார்கள் காலநிலை கூற்றத்தின் தலைநகராயிருந்தமை தெரியலாம். சங்க காலத்தில், சேரசோழர்க்குள் பெரும்போர் நிகழ்ந்த களங்களுள் இவ்வெண்ணியும் ஒன்று (அகம். 55, 246; புறம். 66), வெண்ணிக்குயத்தியார் என்று, சங்கநாவிற் பேர்பெற்றிருந்த பெண்பாற்புலவரும் இவ்வூரினரே யாவர். செங்கணான் போர் நிகழ்த்திய களம் இவ்வூரே யாதலின், இதனை 'வெண்ணி ' என்றே படித்துக் கொள்க, 21. க்ஷ, திருமொழி 6-ஆம் பாசுரத்தில்“மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண்னேறத் தனிவேலுய்த் துலக மாண்ட...சோழன்', என்ற அடிகளிலே, மேற்கூறிய சோழனது வேறொரு வெற்றிச்செயலும் கூறப்பட்டுள்ளது. இதனில் விளைந்தவேளை' என்பதை விளந்தைவேளை எனத் திருத்திக் கொள்க. இத்திருத்தம்பற்றி, 16-வருஷங்கட்கு முன்பே ஆழ்வார்கள் காலநிலையுள் குறிப்பிட்டுள்ளேன். விளந்தை என்பது, திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளவம் ஜமீனைச் சார்ந்து, கோட்டை முதலிய பழஞ்சின்னங் களுடன் இன்றும் உள்ள ஊராகும். இவ்வூரைத் தலைமையாகக் கொண்டு இதனைச்சூழ்ந்துள்ள பகுதி விளந்தைக்கூற்றம், விளந்தைப் பற்று என வழங்கி வந்தது. சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும் பெரும்போர் மூண்ட களமான கழுமலம் என்ற அரண் பெற்ற ஊர் இவ்விளந்தைக்கூற்றத்தைச் சார்ந்ததே. அப்போரில், சேரன்படை முதலியான கணையன் - என்பவனை வென்று அக்கழுமலத்தைச் செங்கணான் கைப்பற்றினான் என்று அகநானூறு முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன. இவற்றினின்று