பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 323 விளந்தைக்கூற்றத்தில் நடந்த போரையே அந் நூல்கள் கூறுவன என்றும், அவ்விளந்தைத் தலைவனான வேளே சேரன்படை முதலியான கணையன் என்றும் கருத இடங் தருகின்றது. இவ்வாறாயின் விளந்தைவேளான சேரன் படைத்தலைவனைப் போரில் வென்று சோழன் உலக மாண்டசெய்தியைச் சங்க நூல்கள் போலவே, திருமங்கை மன்னனும் கூறினாராயிற்று. ஆராய்ச்சித்தொகுதி யிலும் இதனை நன்கு விளக்கியுள்ளேன் (பக். 245-8). 22. பெரியதிருமொழி 7-7-2-ஆம் பாசுரத்தின் முதலிலே. “பரனே ! பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன்னர் மன்னர் தாம்பணிந் தேத்தும்-வரனே! என்ற தொடருள், 'பௌழியன்' என்று ஓதும் பாடம் ‘பூழியன்' என்று திருத்தற்குரியது. பூழியன்-பூழி நாட்டுக்குரியவன். பூழி-சேரமண்டலத்தின்பகுதியான 'கொடுந்தமிழ்நாடுகளில் ஒன்று; "குடங்கற்கா வேண் பூழி என்ப. இந்நாட்டுரிமைபற்றிச் சேரனைப் பூழியன் என்ற பெயரால் பழைய நூல்களும் நிகண்டுகளும் வழங்குவன. இப்பூழிநாடு பாண்டியர்வ்சமான பிற்காலத் தில் அப்பாண்டியனைப் பூழியன் என்ற பெயரால் வழங்கியது முண்டு. ஆனால் பழையவழக்கு அவற்கு இல்லை. பௌழியன் என்ற தத்திதம்போன்ற பெயர் வழக்கு சேரர்க்கு யாண்டும் காணப்படாமையால் இதுவும் திருத்தம் பெறத்தக்கதே. 23. ஷ திருமொழி 10-2-4-ஆம் பாசுரத்தில் "மாமயிலகன்ன அஞ்சலோதியைக் கொண்டுநடமின்" என்ற தொடரில், அஞ்சலோதி' என்பது வ்யாக்யான * பாடம். இதற்கு "அஞ்சு-(இருட்சி, சுருட்சி, நீட்சி