பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 325 என்று திருத்தமாக ஓதற்பாலன. தேகாத்மாபிமான மான ஜன்மங்களிலே...பிரவேசிப்பித்து' என்பது முதல் மேற்கோளின் வ்யாக்யானம். அதனால் இவ்விடங்களி லெல்லாம் 'கண்' என்ற ஏழாம் வேற்றுமையுருபே முன்னோர் வழங்கிய பாடம் என்பது தெரியலாம். 25.க்ஷ திருமொழி 8-10-6, 7-ஆம் பாசுரங்களிலும், 5-2-ம் திருமொழி முழுதினும்“நமன்றமர் பற்றாது காத்திபோல் கண்ணபுரத் துறையம்மானே" உன்றமர்க்கென்றும் நமன்றமர் கள்ளர்போல்” எனவருந் தொடர்களிலே, 'போல்' என்பவை 'காத்தி போன்ம்' 'கள்ளர்போன்ம்' என்றே ஓதற்பாலன. போன்ம். போலும் என்பதன் திரிபு, இதனை ஒப்பில்போலியில் வரும் உரையசை என்பவர், முற்றுவினையிலும் திசையறி மீகானும் போன்ம்' (பரிபா,) என்று இவ்வாறு திரிந்துவழங்கும். ளகர லகரங்கள் திரிந்து, மருண்ம் (= மருளும்), போன்ம் (= போலும்) என ணகர னகரங்களின் முன் வரும் மகரம் மாத்திரை குறுகலின் மகரக்குறுக்கம் என்பர் இலக்கண நூலோர். இம் முறையே திருமாலையில்“நின்னோடு மொக்க வழிபட அருளினாய்போன் மதிற்றிரு வரங்கத்தானே என்ற தொடருள், 'போன்மதில்' என்று புணர்ந்துள்ள தைப் போன்ம் மதில்' என்று பிரித்து ஒதுக. இவ்வாறு பிரித்தோதாக் குறையிலிருந்தே, 'போல்' என்பதே நேருருவம் என்றுகொண்டு, பலவிடங்களிலும் அதுவே வழங்கலாயிற்று,