பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 27: ளாலும் அவரெல்லாம் கடைச்சங்கத்துக்குப் பிற்பட்ட காலவிசேடங்களில் விளங்கியவர்கள் என்பதுமே அன்னோர் முடிபு. “ சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் (பெரிய திரு. 3, 4, 10) " சங்கத் தமிழ் மாலை முப்பதும்” (திருப்பாவை, 30) என்று, அச்சங்கத்தை அப்பெரியார்கள் குறிப்பிடுதலா லும், அச்சங்க காலத்துத் தமிழரசனான கோச்செங்கணா னுடையதும், 8 ஆம் நூற்றாண்டினனாகத் தெரிந்த பல்லவமல்லனுடையதுமான வரலாறுகளைப் பழைய சாஸனங்களும் நூல்களும் கூறுமுறையே திருமங்கை யாழ்வார் பாடுதலாலும், அவ்வாழ்வார் திருஞான சம்பந்தரோடு ஒருகாலத்தவரென்று குருபரம்பரைகள் கூறுவதாலும், அச்சம்பந்தர்காலம் 7-ம் நூற்றாண் டென்பது சந்தேகமறக் கொள்ளப்பட்டுச் சைவர் பலருடைய சம்மதமும் பெற்றுள்ளமையாலும் திருமங்கையார் காலம் மேற்கூறியவற்றிற்குச் சில வாயிரவாண்டு முற்பட்ட தென்பது பொருந்தாதாம்-- என்றிவை போன்றன பலவும் நவீன சரித்திரவாராய்ச்சி வல்லாரின் வாதங்களாகும். விநோத வாதங்கள் இங்ஙனம் வாதிப்பவரிற் சிலர் ஆழ்வார்கள் காலத்தை அறுதியிட்டுக் கூறும் கொள்கைகளோ மிக வினோதமானவை, ஸ்ரீவல்லபன், குலசேகரன் என்ற பெயர்களை இராமாநுஜர் காலத்துக்குப் பிற்பட்ட பாண்டியகேரளவரசர்சிலர் கொண்டுள்ளதைக் கண்ட தும், பெரியாழ்வார் குலசேகரப்பெருமாளிருவரும்