பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 ஆழ்வார்கள் காலநிலை கிருமகளாரான ஸ்ரீ கோதையின் திருமணத்தைச் சடகோபர் திருவுள்ளத்துக்கேற்ப அவர் திருநகரியிலே நடத்திப்போந்த சிறப்பை அக்காவியம் பலபடப் புனைந்து கூறும், ஸ்ரீசடகோபர், ஆண்டாள் பாசுரங் களைக்கேட்டு உருக்கமும் இரக்கமும் அடைந்தனர் என்றும் அது கூறுதல் காணலாம். இக்காலத்தே திருமங்கை மன்னன் தம் களவுத் தொழிலில் முனைந்து நின்றனர் என்றும், ஸ்ரீகோதை அழகிய மணவாளனை மணந்து மணக்கோலமாகத் திருவரங்கஞ்செல்லும் இடை வழியில் வழிமறித்து, வாள்வலியால் அவர் மந்தி ரோபதேசம் பெற்றனர் என்றும் சொல்லப்படுகின்றன. இன்னும் உள்ள வேறுபாடுகளை, அவ்வவ்வாழ்வாரைப் பற்றிக் கூறுமிடத்திற் குறிப்பிடுவேன். இவ்வாறு திவ்யசூரிசரிதத்திற்கண்ட வரலாறுக ளெல்லாம் அந்நூல் தோன்றிய ஸ்ரீராமாநுஜ முனிவரர் காலத்தே ஆழ்வார்களைப் பற்றிப் பிரபலமாக நாட்டில் வழங்கிவந்த செய்திகள் என்றே கொள்ளத் தடை யில்லை. அச்செய்திகள் யாவும் சரித்திரவுண்மைக் குரியன என்று நாம் கொள்ள முடியாது. ஆயினும் அவற்றினின்றும் நம் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளத் தக்கன சிலவுள, அவையாவன;ஆழ்வார்களிற் பெரும்பாலாரும் ஒரு காலத்தவர்களே என்பதும், அவருள் நம்மாழ்வார் பிரதானராக அவர் காலத்தே கருதப்பட்டவர் என்பதுமே யாம், ஆழ்வார்களெல்லாம் சமகாலத்தவர்கள் என்ற செய் தியைப் பின்பழகியசீயர்குருபரம்பரை தெளிவாகக் கூறியதில்லையேனும், நம்மாழ்வாரை அவயவியாகவும்; ஏனையாழ்வார்களை அவர்க்கு அவயவங்களாகவும் அந் நூல் கூறுவதற்கு இதுவே கருத்தாதல் வேண்டும்.