பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதலாழ்வார் மூவர் 45: என்று யாப்பகுங்கலவிருத்தியில் (பக். 518) பொய்கை வாக்காகக் கண்ட வெண்பாவால், இவர் திரையனொரு வனைப் புகழ்ந்துள்ளமை தெரியலாம். திரையரென்பார்,, பல்லவரைப் போலவே அவர்க்கு முன் தொண்டை நாடாண்ட தமிழரச வகுப்பினராவர். இத்திரையருட் பல்லவரும் ` அடங்கியவராகக் கருத ஆதாரங்கள் உள்ளன. வழங்காமை காணலாம, “நாலடி நான்மணி கைந்நிலைய' வாங்கீழ்க் கணக்கு" என்ற பாடற்படி, கைந்நிலை என்று. பெயர் பெற்றுள்ள நூலைக் கீழ்க்கணக்குக்களுள் ஒன்றுகக் கொள்வதில் எத்தடையும் இதுகாறும் நிகழ்ந்திலது. அகப் பொருள் பற்றியமைந்த அப்பழைய நூலின் சிதைப்பிரதிகள்" தமிழ்ப்பெரியார் சிலரிடத்தும், மதுரைத் தமிழ்ச் சங்கத் திலும் உள்ளன. அத்தகைய நூலொன்று உண்டென்பதை அறியாமையாலோ, வேறெக் காரணத்தாலோ-'இனிய, நிலையுடைய காஞ்சி' என்ற பொருளில் வந்த “இன்னிலைய காஞ்சி" என்ற பாடத்தை மாற்றி, இன்னிலை என்பது ஒரு நூலென்று கொண்டு, அவ்வாறு கொண்டதற்கேற்றதொரு. நூலையும் பாடிப் பொய்கையாரை அதன் ஆசிரிய ராக்கினரோ என்ற சங்கை பெரிதும் நிகழ்கின்றது. இதனை இயற்றியவர் பொய்கையாழ்வார் ஆதல் வேண்டும் என்று சிலர் கருதியது பெருந்தவறேயாம். சொற்பொருட் சுவைகள் பெருகி நிற்கும் அவர் திருவந்தாதியின் வாக்கிற் கும், அவையின்றிக் கருகி நிற்கும் இதன் போக்கிற்கும் சிறு தொடர்பும் காண்டலரிது. இந்நூலின் சொற்பொருளமைதி களினும் அதிசங்கை நிகழ இடமுண்டேனும் அவற்றை விரிப்பதற்கு இஃது இடமன்று. சுருங்கக் கூறுமிடத்து, இது பழைய பொய்கையாரதன்றி நற்பெயர் விழையா விற்பன ரான பொய்கையார் ஒருவராற் புனைந்து விடப்பட்ட நூலென்றே கூறற்குரியது என்க. 1. திரைய மன்னருள், பல்லவத்திரையர் என்ற பிரிவினரும் ஒருவர் என்று தொண்டை மண்டலப்,