பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 ஆழ்வார்கள் காலநிலை பகுதி முதல் 7ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்வரை வாழ்ந்த பேரடியார்கள் என்பதும், இவர்கள் வரலாறு களிற் சிலவும் இவர்களருளிய நூல்களும் பண்டை யுரையாசிரியர்களால்' எடுத்தாளப்பெற்றவை என்பதும் ஒருபடியாகத் தெரியலாம். இக்கால்வரையும் துவாபர யுகத்தவர்களாகவும் ஏனைய ஆழ்வார்கள் கலிபிறந்த பின் அவதரித்தவர்களாகவும் குருபரம்பரைகள் கூறுவ தனாலும், இவர்கள் ஏனையோர்க்கு முற்பட்ட காலத்தின ரென்பது பெறப்படும். இதற்கேற்ப, இன்னோர் அருளிய அந்தாதிவெண்பாக்கள் செப்பலோசைத்திறத்தினும், தொடைாடைப் போக்கினும் சிறந்து திகழ்தல் காண லாம். “யானே, இருந்தமிழ்நன் மாலை யிணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது. என்று, பூதத்தாழ்வார் தம்மைக் கூறியுள்ளபடியும்' அட்டபுயகரத்துத் திருமாலைப் பாடும்போது, திருமங்கை மன்னன் - செந்தமிழ் பாடுவார்' தாம் வணங்குந் தேவ ரிவர்கொல் தெரியமாட்டேன் (பெரிய திரு. 2, 8, 2). என்று அருளியபடியும், முதலாழ்வார்களைப் 'பெருந் தமிழர்' என்றும், அவர்கள் அருளிச்செயல்களைச் செந்தமிழ்' என்றுங் கூறுதல் தகும். நாலாயிர திவ்யப் பிரபந்தங்களுள் இசைத்தமிழ்ப்பகுதியிற் சேராத இயற்பா என்ற தொகுதியுள், இவ்வாழ்வார்கள் நால்வரும் 1. 'செந்தமிழ் பாடுவார்' என்பது முதலாழ்வார்களைக் கருதியதாகும் என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கி பானம்.