பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • 78)

ஆழ்வார்கள் காலநிலை

  • என்றவாறு, பெரியாழ்வார் என்ற திருநாமம் இவர்க்கு வழங்கலாயிற்று என்பர். இங்ஙனம் கோபவிருத்தியை மேற்கொண்டு கண்ணனை அனுபவித்த இவர் அனுப வங்களையும், அப்பெருமானிடம் கொண்டிருந்த ஈடுபாடு களையுமன்றி, திருமழிசையார் திருமங்கைமன்னன் முதலிய ஆழ்வார்கள் வாக்கிற்போல, தேவதாந்தரங் களைப் பற்றியேனும் தம் காலத்திருந்த பிற சமய நிலை களைப்பற்றியேனும் யாதொரு குறிப்பும் இவர் திருவாக் குக்களினின்றும் அறியக் கூடவில்லை.

பாண்டியன் முன் சமயவாதஞ்செய்து வெற்றி பெற்றவராகக் கூறப்படும் இவ்வாழ்வார் தம் காலத் தில் வைஷ்ணவனாக விளங்கிய பாண்டிய னொருவனைச் சிறப்பிப்பது தவிர, வேறு உலக நிலைமை யொன்றை யுங் குறிப்பிடாததற்கு, அவ்வரசனை அடிமையாக்கி அவனாற்பெற்ற பெரும் பொருளைத் திருமால் கைங்கரி யங்களில் விநியோகித்து, உலகப் பற்று ஒன்று மின்றிப் பிரபத்தி நிஷ்டையில் இப்பெரியார் முனைந்து நின்றதே காரணமாகவேண்டும். “ விழிக்குங் கண்ணிலேன் நின்கண்மற் றல்லால் வேறொருவரோ டென்மனம் பற்றாது 4 நாட்டுமானிடத் தோடெனக்கரிது' 14 நான், உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை யோவா தேநமோ நாராய ணாவென் றெண்ணா நாளு மிருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுன பாத கண்ணா நாளவை தத்துறு மாகில் அன்றெனக்கவை பட்டினி நாளே” “ என்னையும் என்னுடைமையையுமுன் சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு நின்னருளே புரிந்திருந்தே னினியென் திருக்குறிப்பே"