பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளப் போதிக்கவில்லே என்று அன்றே அவர் வலியுறுத்தினர். அன்பே வாழ்வின் உயிர்நாடி வள்ளுவப் பெருந்தகையும் அன்பின்’ விழியது உயிர்நிலை என்ருர், அக் கருத்தைத் தழுவியது போலவே இக்பாலின் இதய வீணையில் அன்புப் பாடல் ஒன்று எழுந்தது. r

“இவ்வுலகில்

புதியதோர் தேவாலயத்தை,

அன்புக் கோயிலே, ஒருவர்க்கு ஒருவர்

நேசங்கொள்ளச் செய்யும் ஆலயத்தை எழுப்புவோம்” என்று அந்தப் பாடல் ஒலித்தது. - -

பாட்டாளிகளிடம் பரிவு மிகக் கொண்டவர் இக்பால். அந்தப் பரிவைப் பல கவிதைகள் காட்டுகின்றன. -

“உழைத்துப் பெருத எதுவும்

மனிதனின்

உடைமை அல்ல’’ என்பது அவர் கொள்கை. ‘உழைப்பின் பயன்களை எல்லாம் முதலாளிகள் உண்டு கொழுப்பதேன்? “ என்று விளு எழுப்பியவர் இக்பால்

“தொழிலாளியின்

துயர்கள் எல்லையற்றவை;

முதலாளித்துவக் கப்பல் - ..

அழிவதென்று? " என்பதாக முதலாளி-தொழிலாளி பிரச்னை பேசி, பொதுவுடைமைக் கருத்திற்கு ஆதரவு தெரிவிக் கின்ருள் அல்லாமா இக்பால். r ; : . -

  1. 39.