பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சூடேற்றுங்கள் வல்லுறை எதிர்த்துப் போராடும் ஆற்றலைச் சிட்டுக்கு அளியுங்கள்! உழுபவனுக்கு உணவாகப் பயன்படாத தானியக் கதிர்மணிகள் அனைத்தையும் நெருப்பில் இடுங்கள்! நவீன நாகரிகம் ஊதுலையாகவே நிற்கிறது. கிழக்கு நாட்டின் கவிஞனுக்கு (இக்பாலுக்கு) ஆவேசம் அருளுங்கள். அவன் பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலிக்கட்டும்”. இவ்வாறாகத் தன் சொல்லை நின்று கேட்கத் தயங்கிய இசுலாமியர்களுக்கு இறைவன் வாயிலாகப் புதிய சமூக நீதியை இக்பால் உணர்த்தினார்.

                                          தாமரை. அக்.”62




                               20