இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உலகியக்கம்
இவ்வுலகில் இயக்கமின்றி
நிலைத்திருக்க
இடமில்லை, இறப்பில்தான்
இயக்கம் இல்லை.
செவ்வையுற உழைப்பவா்கள்
முன்னேற்றத்தைத்
திசையெங்கும் எட்டுகின்றாா்,
இயங்குகின்றாா்.
அவ்வியக்கம் இல்லாமல்
ஒரு கணத்தைத்
தயக்கத்தின் அடிகொண்டு
நிற்பாராகில்
சிவ்வென்று பறந்தோடும்
காலத்தோில்
நசுக்குண்டு சிதைந்தழிவர்
சுவடே இன்றி.
ஒவ்வொரு பொருளும் தன்னுள்
உந்தல் பெற்றே
உாிய ஒரு குறிக்கோளுக்
குழைக்கும் என்றும்.
38