இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புரட்சியின் அடையாளம்
உழைத்துப் படைக்கும்
உரம்பெறும் கைகளே
புரட்சியின் அடையாளம்!
முழக்கிடும் புதுமை
உலகினை உணர்த்திட
முந்திடும் பெருஞ்சின்னம்!
கற்றறிந் தார்களின்
மெல்லிய கைகள்
தூவல் ஒன்றே தாங்கும்.
மற்றெதும் துக்கி
வருத்திடல் இல்லை, என்
மதிப்பில் அவை தாழும்.
தச்சனின் கைகளைக்
காண்கிறேன், அன்னவை
கரடு முரடுகள்தாம், எனின்
தச்சுளி வாளினைத்
தாங்கி உரம்பெறும்
தகவால் மிக உயர்வே.
43