பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     வேங்கை நெஞ்சம்

     அடிமைத் தளையில்
     சிக்குண்டிருக்கும்
     அல்லல் பொழுதினிலே,

     வடிவார் வாள்களும்
     வலிமைத் திட்டமும்
     வரிசைப் படுவதில்லை.

     இடியே றனைய
     வேங்கை நெஞ்ச
     உறுதி இணைந்துவிடின்,

     பொடிப் பொடியாக
     விலங்குகள் தகரும்
     வீரம் பொலிந்திடுமே.

75