பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துடைக்கிறோம், என்பதை மன்பதைக் குணர்த்தும் தோழர் ம. இலெ. தங்கப்பா இப் பாடல்களை ஆங்கில மூலத்துடன் ஒப்பீட்டு செப்பனிட்டுத் தந்தார்.

யானறிந்திருந்த இக்பாலின் பேருள்ளத்தை, பேருருவை, பாட்டெழிலை மேலும் எனக்கு அறிமுகம் செய்தூக்கிய உருது மொழிப் பாவலர் காவிஷ் பந்திரி ஒத்துழைப்பு பெரியது. கலை, தன்னை மணந்து வாழும் காதலனையே விரும்புகிறது. வியந்து காதலிப்பவனுக்கு வாழ்க்கை நிலை கைவரப் பெறுகிறது. அதன் வழியே மாந்த இனத்திற்குக் கலைக்காதலன் மாபெரும் வள்ளலாகின்றான்; பரிசளிக்கின்றான். அவ்வகையில் இக்பாலின் வாழ்க்கையும் இலக்கியமும் நூற்பரிசினை அளிக்கும் வள்ளல் பெருந்தகை ஆஜி சங்கு அப்துல்காதர் ஆவார். பாட்டு அன்பாற்றலுடையது. அதுவே மாந்தரைக் கூட்டுவிக்கிறது; ஆட்டுவிக்கிறது. அந்த நிலையில் இந்த ஏட்டுச் சிறப்புக்கெல்லாம் உயிரோட்டமாய் நின்றவர் ஆற்றுப் படுத்தியவர் நண்பர், புலவர். வா. மு. சேதுராமன் ஆவார்.

மானுடத்தின் பேரறிவே நாம் பெறும் பேறு; மானுட மாண்பே முடிவற்றது என்றுணர்த்திய தோழர் ப. சீவானந்தத்தின் கட்டுரையை நூலுள் சேர்த்துள்ளேன் பயன் பெறுக.

இந் நூலின் இறுதியில் உள்ள இக்பாலின் வாழ்க்கை வரலாற்றை, நன்காய்ந்து எழுதி நூலிற்குச் சிறப்புச் செய்த 'திட்டம் உதவி ஆசிரியர் பாவலர் சொக்கு சுப்பிரமணியம் துணை மிகப் பெரியது.

பாட்டுக்கலை, பிற கலைகளைப் போலவே ஒழுங்குடையது, செம்மையுடையது. விழுமியது. நாம் எண்ண உலகிலே இருந்தாலும் நாம் படைத்த வடிவுக்கும், வண்ணத்திற்கும், ஒலிக்கும், உருவுக்கும் கட்டுப்பட்டவர்கள். நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பன்று. கருத்தின் மொழியாக்கமே (Transcreated). கற்பார்க்கு எளிமை கருதி சீர், அடி,தளைகளை வகையுளியாக்காமல் விட்டுள்ளேன்.

6