84
அங்கே மேலே படித்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற தேவை இல்லை. இங்கே வைத்தியப் படிப்புப் படித்தால்தான் வசதியாக வாழ முடியும் என்ற சூழ்நிலை; இன்ஜினியராக இருந்தால்தான் நிலையான பதவிகளில் உயர்வு பெறமுடியும் என்ற நம்பிக்கை; சூழ்நிலை;
இப்பொழுது இங்குச் சட்டப் படிப்புக்கும் கடும் போட்டி ஏற்பட்டுவிட்டது. காரணம் சுதந்திரமாகத் தொழில் செய்து பிழைக்கலாம் என்ற நம்பிக்கை; மற்றொன்று நாட்டில் குற்றங்கள் இவர்கள் பிழைப்பைத் தேடி.க்கொள்ளத் தக்க வகையில் பெருகிக்கொண்டும் வருகின்றன. மற்றொன்று இதுவரை படி.த்துவந்த கலைக் கல்லூரிகளில் பட்டங்களுக்குத் தொழில் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. படிப்பு வேறு; தொழில் வேறு என்ற பேதத்தை உணரமுடிகிறது. படிக்கும்போது ஏதோ ஒரு நோக்கத்தில் படிக்கிறான்; அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் பிற்காலத்தில் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுவதில்லை. அது ஒரு குறை என் றும் கூற முடியாது. நாலும் தெரிந்தவனாக இருந்தால்தான் ஏதாவது ஒன்றுக்குப் பயன்படுவான், கல்லூரிகளில் கல்விப் பயிற்சியும் சில துறைகளில் சிறப்பு அறிவும் பெற முடிகிறது. பிற்காலத்தில் வாய்ப்புக்கேற்றபடி அவன் தனித்து வளர முடிகிறது.
அங்கே அனைவரும் மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்று திட்டமிடுவதில்லை. மேல்நிலைப் பள்ளி முடித்ததும் அவரவர் போக்குக்கும் திறமைக்கும் ஏற்படத் தொழில் ஏற்று மன நிறைவு பெறுகின்றனர். அந்த அந்தத் தொழிலில் அவர்கள் மனநிறைவு பெறுகின்றனர். இப்படி ஆகியிருக்கலாமே என்ற ஏக்கங்கள் அவர்களை வாட்டுவது. இல்லை .