பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

‘என் வாழ்க்கையும் ஒரு சதுரங்க விளையாட்டாக தான் ஆகிவிட்டது விளையாட்டின் வெற்றித் தோல்வி யாருக்குச் சொந்தம் ! எனக்கா? என் ஊர்வசிக்கா? இல்லை விதிக்கா, அன்றித் தெய்வத்துக்கா ?”

அக்கணம் வரையிலும் தோன்றாததொரு புதுப் பிரச்னை அவனுள் பூதாகாரமாக விசுவரூபமெடுத்தது மறுகணத்திலேயே, அவ்வெண்ணத்தை அவன் அலசினான். அவனுடைய மனச்சாட்சியின் முக்கோணத்தைச் சமைத்த உள்ளம் உணர்ச்சி, அறிவு ஆகிய உணர்வுப் புள்ளிகளை வைத்து எடை போட்டான்.

சிந்தனை சூடேறியது.

புகை சூடேற்றியது

'ஏன் இந்தப் புதிர் என்னுள் தோன்றவேண்டும்? இதில் என்ன சிக்கல் இருக்கிறது ? என்ன புதிர் இருக்கிறது? எதுவும் என் இலட்சியத்துக்குக் குறுக்கே நிற்க முடியாதே? வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டாக இருக்கட்டும். என்வரை-என் ஊர்வசி வரை! எங்கள் இருவரது மன நிலைகளும் சதுரங்க காய்களாக இருக்கட்டும் எங்கள் வரை !

ஆட்டம் என்றால் அதன் வெற்றியும் தோல்வியும் எங்கள் இரண்டு பேருக்குத்தானே சொந்தமாகப் போகிறது! நான் ஜெயித்தால், அந்தப் பெருமையில் ஊர்வசிக்கும்-என்னுடைய ஊர்வசிக்கும் பங்கு உண்டு' ஊர்வசி -என் ஊர்வசி ஜெயித்தால் அதில் எனக்கும் பாகம் சேர்த்தி தான்.

இது போலவே, எங்களுக்குள் நிலவுகிற தோல்வியிலும் எங்கள் இருவருக்குமே ஜோடியாகப் பங்கு இருக்கத்தான் இருக்கும். ஆனால், எங்கள் விளையாட்டி ல்- எங்கள் இ - 9