பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 54

அவளது கோல விழிகளில், ஆனந்தக் கண்ணிர் இட்டிருந்தது.

‘என் பாக்கியமே பாக்கியம், அத்தான்!”

உருக்கத்துடன் மகிழ்ந்தாள் அவள்.

மீனாட்சி அம்மாள் தலையைக் காட்டினாள்.

“அப்புறம் என்னத் திட்டம், மாப்பிள்ளை’ என்று கேட்டாள்.

‘எனக்கின்னு இனிமேல் தனித்திட்டம் எதுவும் இல்லிங்க’.

“அப்படியானால் ஆவணியிலேயே முகர்த்தம் வச்சிப் பிட வேண்டியதுதானுங்களே!’ -

‘ஆஹா!’

நாணமும் முயங்கின.

அவன் புறப்பட எழும்பினான்.

இங்கேயே நீங்க படுத்திருக்கலாமே, அத்தான்?”

மெல்லொலியில் சொன்னாள் ஊர்வசி,

“ஆவணி பிறந்திடட்டும், ஊர்வசி!’

மெல்லொலியில் சிரித்தான் அம்பலத்தரசன்.

அவளுடைய மார்பகத்தில் பதிந்திருந்த தங்கச் சங்கிலி யின் பதக்கம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

நான் இப்போது சொன்னதானது சாதாரண - அர்த்தத் திலே தானுங்களே!”

நம் இதயங்கள் வாழத் தொடங்கி விட்டன. நாம் வாழத் தொடங்குவதற்காகத்தான். ஆவணியை எதிர்பார்க் கிறேன். நானும் சாதரணமாகத்தான் சொன்னேன்.”