பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


சத்தியமும் தருமமுமான ரெண்டொரு சங்கதிகளை தாக்கல்களை நீ மனசிலே வாங்கிக்கிட வேணும்னு தான் நான் ஒன்னைத் தேடி அலைஞ்சேன்! நீ கெடைக்கலே மறுபடியும் எனக்குப் பாவமே தான் மிச்சம் காட்டுது!_ஐயையோ! ஒன்னோட கற்பு பறிபோன ஆறாத துயரத் திலே, இந்நேரம் எம்மாதிரியே நீயும் சாவோட சந்தி தானத்திலே நின்னுக்கிட்டு இருக்கியோ. என்ளமோ?_

நான் எத்தனை பெரிய பாவத்தைச் செஞ்சுப்புட்டேன்! நான் சுமக்க வேண்டிய பாவத்தைச் சுமந்து என்னை ரட்சிக் கச் சிலுவையைச் சுமக்கக்கூடிய இன்னொரு சிலுவைச் சாமியா இனி பிறக்கப் போறார் ?- ஊகூம் !- ஆனாலும் ஒனக்கு ஆயுசு கெட்டின்னுதான் என் உள் மனசுக்குத் தோணிக்கிட்டு இருக்குது. அதாலே, நான் சொல்ல வேண்டி யதைச் சொல்லிப்புடனும், எனக்கு நேரமாகுது இல்லை யா? அதுக்காவத்தான் இப்படி அவசரப்படுறேன்.

கேட்டுக்க புள்ளே காலே வீசம் நாழிக்கு முன்னாலே கூடிக் கலந்து, பின்னிப் பிணைஞ்சு நான் இன்பம் அனுப விச்சது ஒன்னை இல்லே! - என்னோட அன்புக்கிளியான அன்னக்கிளியைத் தானாக்கும் நான் இன்பம் அனுபவிச் சேன். பிறந்த மேனியாய் என் அன்னத்தை அழகு பார்த்த அந்த மோகக்கிறக்கத்தோடதான் நான் இன்பத்தை அனு பவிச்சேனாக்கும்! _தாராடிச்சாமிக்குப் பொதுவாகச் செப்புற சத்தியப் பேச்சு இது. இந்த அதிசயப் பேச்சை நீ நம்பவும் வேணும்.

என்னோட சத்தியத் தருமத்தின் நாயம் எம்மனசுக்கு_என் நெஞ்சிலேயும் நினைவிலேயும் அல்லும் பகலும் குடி யிருந்துக்கிட்டு இருக்கிற எம்புட்டு மனசுக்கு மட்டுமே தான் புரிய முடியுமாக்கும்! எம்மனசை நீயும் புரிஞ்சுக்கிட்டா, அதுவே எனக்கு ஒரு பாக்கியமாகவும் அமைஞ்சிடும் !