பக்கம்:இசைத்தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}; என்பர் யாழ் நூலார். இப்பண்ணமைந்த பதிகங்களை நீலாம்பரி சாகத்திற் பாடுதல் பிற்கால வழக்கமாகும். 45. கொல்லிக்கெளவானம் குறிஞ்சிப் பெரும்பண்ணில் படுமலை என்னுந்திறத்தின் அகநிலையாய்ப் பண்வரிசையில் 49-என்னும் எண் பெற்றது கெளவாணம் என்ற பண்ணுகும். முன்ருந்திருமுறையில் 42-ஆம் பதிகத்திற்கும் ஏழாந்திருமுறையில் 38 முதல் 46 வரையுள்ள பதிகங்களுக்கும் உரியதாகக் குறிக்கப்பெற்ற கொல்லிக்கெனவானம் என்ற பண், நூற்றுமூன்று பண் களுள் ஒன்ருக மேலே குறித்த கெளவாணம் என்ற பண் ளுகவே இருக்கலாம் என்பர் யாழ் நூலார். இப்பண்ணின் பழைய உருவம் நன்கு புலப்படவில்லை. இப்பண்ணமைந்த பதிகங்களைப் பிற்காலத்தாருட் சிலர் சிந்து கன்னடா என்ற இராகத்திலும் பலர் நவரோசு என்ற இராகத்திலும் பாடுதலை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 54. பழந்தக்கராகம் இது, குறிஞ்சிப் பெரும்பண்ணில் மருள் என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 54-என்னும் எண் பெற்றது. இப்பண் முதல் திரு முறையில் 47 முதல் 82 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறையில் 12, 13-ஆம் பதிகங்களிலும் அமைந்துளது. இதன் பழையவுருவம் இதுவெனத் திட்டமாகத் தெரியவில்லை. பிற்காலத்தார் பழந்தக்க ராகப் பதிகங்களைச் சுத்த சாவேரி என்னும் இராகத்திற் பாடுதலை வழக்கமாகக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/111&oldid=744961" இலிருந்து மீள்விக்கப்பட்டது