பக்கம்:இசைத்தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 முத்தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியஞரால் செய்யப் பட்ட அகத்தியம் என்றதொரு தமிழிலக்கண நூல் இறை வகுக் களவியல் உரையிலும் இளம்பூரணர் உரையிலும் சிறப்பித்து உரைக்கப்படுகின்றது. அகத்தியனராற் செய் யப்பட்ட மூன்று தமிழினும்” எனவும், 'தோன்று மொழிப் புலவரது பிண்டமென்ப” என்ற தல்ை பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளதென்பது, அது முத னுலாகிய அகத்தியமே போலும்; என்ன? அஃது இயற் றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் முன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின்" எனவும் கூறுவர் பேராசிரியர், "அகத்தியம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நிற்றலின் அது பிண்டத்தினையடக்கிய வேருெரு பிண்டம்” என்பர் நச்சிஞர்க்கினியர், மேல் எடுத்துக்காட்டிய உரைத் தொடர்களால் அகத்தியம் முத்தமிழுக்கும் இலக்கண நூல் என்பது நன்கு தெளியப்படும் "நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம், முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன” என அடி யார்க்கு நல்லார் கூறுதலால் முத்தமிழிலக்கண நூலாகிய அகத்தியம் பன்னுருண்டுகட்கு முன்னரே இறந்தொழிந் தமை பெறப்படும். இவ்வாறு பன்னெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் இயல், இசை, நாடகம் என வளம்பெற்று வளர்ந்த முத்தமிழ்த் திறங்களையும் இனிது விளக்கும் இலக்கியமாக இளங்கோவடிகளால் இயற்றப் பெற்றது இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலையாகிய சிலப்பதி காரமாகும். முத்தமிழ்க் காப்பியமாகிய இதனைப் பழுதற்ற முத்தமிழின் பாடல் எனப் போற்றுவர் அடியார்க்கு நல்லார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/14&oldid=744989" இலிருந்து மீள்விக்கப்பட்டது