பக்கம்:இசைத்தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#39 தானம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையான இள * [7-62–8] எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறித்துப் போற்றியுள்ளார். தேவாரத் திருப்பதிகங்களில் ஏழில் (6-17-?, 7-6-7) தண்டு (2-94-6), துத்திரி (3-76-5) என்பனவும் இன்னிசைக் கருவிகளாகக் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் ஏழில் என்பது ஏழிசைகளையும் இசைத்தற்குரிய ஏழு துளைகளையுடைய துளைக் கருவியாகும். பெருவங்கியம் நாகசுரம் என்பன இவ்வகையைச் சார்ந்தன எனக் கருது தல் பொருந்தும், தண்டு என்பது வீணையைக் குறித்து வழங்கும் பெயர். துத்திரி என்பது ஊது கொம்பினை யொத்த துளைக்கருவி. மேற்குறித்த யாழ் குழல் முழவு முதலிய இசைக் கருவிகளுடன் இசைவாணர்கள் தாமே தனித்துப் பாடியும் தம்மை யொத்த இசைவல்லார் பலருடனும் சேர்ந்து பாடியும் இசைத்தொண்டு புரிந்து இறைவனை வழிபட்டனர். இவ்வாறே ஆளுடைய பிள்ளையாரும், திருநீலகண்ட யாழப்பாணர் அவர்தம் வாழ்க்கைத்துணைவியார் மதங்க சூளாமணியார் முதலிய அடியார் பலருடன் யாழ் முதலிய இசைக் கருவிகளோடு ஒத்துப்பாடியும், தாமே தனித்துப் பாடியும் இறைவனை இன்னிசைப் பாடல்களால் பரவிப் போற்றியுள்ளார். இங்ங்ணமே பிள்ளையாருடன் சென்ற அடியார்களும் தனித்தும் பலர் ஒன்றுசேர்ந்தும் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களை இன்னிசையுடன் பாடிப் போற்றி ஞர்கள் எனக்கருதுதல் பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/149&oldid=744999" இலிருந்து மீள்விக்கப்பட்டது