பக்கம்:இசைத்தமிழ்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$65 "சுடரொடு திரிதரு முனிவரு மமரரும் இடர்கெட வருளுநி னினேய டி தொழு தேம் அடல்வலி யெயினர் நி ன டிதொடு கடனிது மிடறு கு குருதிகொள் விறறரு விலேயே’ எனவரும் வேட்டுவ வரிப்பாடல், திருஞான சம்பந்தர் அருளிய, 'பிடியத னுருவுமை, கொண்மிகு கரியது' என்ருங்கு முடுகிலாய் வரும் திருப்பதிக யாப்புக்கும் மூல இலக்கியங்களாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கி புணரத் தகுவதாகும், ஆய்ச்சியர் குரவை என்பது, மாதரி முதலிய ஆய்க் குல மகளிர் தீய நிமித்தங்கண்டு தம் சேரிக்கு உற்பாத சாந்தியாகக் குரவைக் கூத்தாடின முறைமையைக் கூறும் பகுதியாகும். இதன்கண் நாடகத்திற்குரிய கருப்பம் முதலிய சந்திகளும் குரவைக்கூத்திற் பாடுதற்குரிய இசைப்பாடல் களும் ஒற்றைத் தாளத்திற்குரிய ஒன்றன் பகுதிப் பாடல் களும் பிறிதோருருவம் கொண்டும் கொள்ளாதும் உள்ள நிலைமையினைப் புலப்படுத்தி வாழ்த்தும் உள்வரி வாழ்த்துப் பாடல்களும், முன்னிலைப் பரவலாகவும் படர்க்கைப் பரவலா கவும் திருமாலைப் பரவிப் போற்றிய தெய்வ இசைப்பாடல் களும் இடம் பெற்றுள்ளன. இதன்கண் உள்ள இசைப் பாடல்கள் இயற்றமிழ் யாப்பு வகையில் குறள் வெண்பாக் களாகவும் நேரிசை வெண்பாக்களாகவும் நாற்சீரடியான் இயன்ற மூன்றடித் தாழிசைகளாகவும், நாற்சீர் நாலடி களாலும் ஐந்தடிகளாலும் இயன்ற கொச்சகவொருபோகா கவும் அமைந்திருத்தல் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/176&oldid=745029" இலிருந்து மீள்விக்கப்பட்டது