பக்கம்:இசைத்தமிழ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 எனவரும் நாலடிச் செய்யுளும் மருட்கைச் சுவை பற்றிய இசைப்பாடல்களாகும். 'வஞ்சியீர்வஞ்சியிடையீர் என்பதுமுதல் வஞ்சிமகளிர் சொல்லாகவரும் இரண்டு பாடல்களும் நாற்சீரடிகள் இந்திளுல் இயன்ற கொச்சகவொருபோகாகும். 'வானவன் எங்கோ' என்பது நேரிசை வெண்பா. 'தொல்லே வினையால் மலேயரையன் பெற்ற' எனவரும் இரண்டு பாடல்களும் முறையே பாண்டியனையும் சேரனேயும் வாழ்த்திய அரச வாழ்த்தாகிய இசைப்பாடல்களாகும். "எல்லா நாம் காவிரி நாடனேப் படுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்’ என அடிமுதற்கண்கூன் பெற்றுவரும் குறள் வெண்பா, சோழ மன்னனை வாழ்த்திய இசைப்பாடலாகும். "வீங்குநீர் வேலி யு லகாண்டு விண்ணவர் கோன் ஓங்கரணங் காத்த உரவேசன்யா ரம்மானை ஓங்காணங் காத்த உரவோன் உயர்விசும்பில் துங்கெயில் மூன்றெறிந்த சோழன் கா ணம்மானே சோழன் புகார் நகரம்மாடேலோ ரம்மானே’ என்பது முதலாக வரும் நான்கு பாடல்களும் மகளிர் அம்மனைக்காய் கொண்டு விளையாடும் விளையாட்டிற் பாடுதற்குரிய"அம்மானைவரி என்னும் இசைப்பாடல்களாகும். நாற்சீ ஆறடிகளால் இயன்ற இப்பாடல்கள் திருவாச கத்தில் நாற்சீரடிகளால் அமைந்த திருவம்மானைப் பாடல் களுக்கு மூல இலக்கியமாக அமைந்துள்ளமை காணலாம். மகளிர் பந்தடித்து விளையாடும் நிலையிற் பாடுதற்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/178&oldid=745031" இலிருந்து மீள்விக்கப்பட்டது