பக்கம்:இசைத்தமிழ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j69 இசைப்பாடல் கந்துகவரியாகும். வாழ்த்துக் காதையில், 'பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட என்பது முதலாகவுள்ள கந்துக வரிப் பாடல்கள் மூன்றும் திருஞானசம்பந்தர் அருளிய நம் பொருணம் மக்களென்று நச்சியிச்சை செய்துநீர் என்ருங்கு வரும் நட்டராகத் திருப்பதிக யாப்பிற்குரிய முல இலக்கியங்களாக அமைந் துள்ளமை அறியத்தகுவதாகும். இவ்வாறே மகளிர் ஊசல் விளையாட்டிற் பாடும் முறையில் வாழ்த்துக் காதையில் வரும் ஊசல்வரிப்பாடல்கள் திருவாசகத்தில்வரும் பொன்னு:சற் பாடல்களுக்குரிய மூல இலக்கியமாக அமைந்துள்ளமை காணலாம். வாழ்த்துக் காதையின் முடிவில் அமைந்த வள்ளைப் பாடல்கள் மூன்றும் மகளிர் உரலில் நெல் முதலியன பெய்து குற்றுங் காலத்துப் பாடு முறையில் சங்க காலத்தில் வழங்கிய வள்ளைப்பாட்டு என்னும் இசைப்பாடல் அமைப்பினைப் புலப்படுத்தும் இலக்கியமாக அமைந்துள்ளமை கருதத் தகுவதாகும். இதுகாறும் கூறியவாற்ருல் தமிழில் வழங்கிய தொன்மை வாய்ந்த இசைப்பாட்டின் இலக்கணங்கள் ஒரு வாறு தொகுத்துணர்த்தப்பெற்றன சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய தேவாரத் திருப்பதிகங்களாகிய தெய்வ இசைப்பாட்டின் இயலமைப்பு பன்னிரு திருமுறை வரலாற்றில் விரிவாக ஆராய்ந்து விளக்கப்பெற்றது. இயல் நலமும் இசைத்திறமும் ஒருங்கமைந்த இசைப் பாடல்களை இசைப்பா எனவும் இசையளவுபா எனவும் வகுத்துரைத்தல் மரபு. நல்லிசைப் புலவர்கள் முதன்முதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/179&oldid=745032" இலிருந்து மீள்விக்கப்பட்டது