பக்கம்:இசைத்தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காலத்தில் அவனுடைய படைத்தலைவன் காலிங்கராயனது நன்முயற்சியால் செப்பேடுகளில் எழுதி வைக்கப்பட்டன என்பது இங்கு அறியத்தக்கதாகும். 2. தேவார யாப்பமைதி தெய்வஞ்சுட்டிய வாரப்பாடல் (இசைப்பாடல்) தேவாரம் என வழங்கப்பெற்றமை முன்னர் விளக்கப்பெற்றது. இயல் இசைத் தமிழ்ப் பாடலாகிய இத் தேவாரத் திருப்பதிகங் களின் செய்யுள் அமைப்புப்பற்றியும் இசையமைப்புப் பற்றி யும் ஓரளவு அறிந்துகொள்ளுதல் இங்கு ஏற்புடையதாகும். நமக்குக் கிடைத்துள்ள தமிழ்நூல்களில் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த இயற்றமிழிலக்கண நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும். இடைச்சங்கப் புலவர் களாலும் கடைச் சங்கப் புலவர்களாலும் போற்றிப் பயிலப் பெற்ற இந்நூல், தமிழ்மொழியின் இலக்கண வரம்பினைப் பேணிக்காக்கும் ஆற்றல் வாய்ந்த தனிமுதல் நூலாகக் கி. பி. பத்தாம் நூற்ருண்டுவரை மேற்கொள்ளப்பெற்ற தென்பது, தமிழ் இலக்கிய வரலாற்ருராய்ச்சியாளர் அனை வர் க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இயற்றமிழ் முதல் நூலாகிய இத்தொல்காப்பியத்தினைப் பெரும்பாலும் அடி யொற்றியும் சிற்சில பகுதிகளில் முழுவதும் வேறுபட்டும் பிற்காலத்தில் தோன்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், பன்னிரு பாட்டியல் முதலிய இலக்கண நூல்கள் தேவார ஆசிரியர் கள் காலத்திற்கு மிகவும் பிற்பட்டனவாதலின், அவ்விலக் கண நூல்கள் தேவாரத் திருப்பதிகங்களின் யாப்பமைதி முதலியவற்றை அறிதற்குச் சிறிதும் துணை செய்வன அல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/77&oldid=745132" இலிருந்து மீள்விக்கப்பட்டது