பக்கம்:இசைத்தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 றும் பன்னிரண்டும் ஆகிய பாடல்களையுடையவாய் வருமென் பதும், ஆசிரியர் தொல்காப்பியனர் 'அறமுதலாகிய மும்முதற்பொருள் எனக் குறித்த உறுதிப்பொருள் முன்ற னுள் ஒன்ருகிய இன்பத்தினைப் பின்னுள்ளோர் காதற்காம மாகிய இவ்வுலக இன்பமும் வீடுபேருகிய பேரின்பமும் என இரண்டாக்கி உறுதிப்பொருள் நான்கெனக் கொண்டனராதலின் அவ்வகையால் நோக்குமிடத்துத் தேவர்ப்பராவிய இத்திருப்பதிகங்கள் உலக இன்பம் என்ற அளவிலன்றிப் பேரின்மமாகிய வீடுபேற்றினைப் பொரு ளாகக் கொண்டு பாடப்பெற்றன எனக்கொள்ளுதல் வேண்டும் என்பதும், அறிவனுற்பொருளும் உலகநூல் வழக்கும் என இருதிறப்பொருள்களையும் ஒருங் குணர்த்து முறையில் அமைந்த திருப்பாடல்களே உலகநூல் வழக்கு ஒன்றினையே யுணர்த்தும் ஏனைச் செய்யுட்களைப் போன்று இலக்கண நூல்களில் வேறும் யாப்பியல் அமைதிக்கு உதாரணச் செய்யுட்களாக எடுத்துக்காட்டுதல் மரபன்று என்பதும், இறைவனது திருவருளின் விளைவாகிய இத் திருப்பதிகங்களே இயலிசைச் சந்தப் பாடல்களுக்குரிய மூல இலக்கியங்களாகக் கொண்டு போற்றுதலே பண்டை யோர் கொண்டொழுகிய முறையென்பதும் நன்கு தெளியப் படும், யாப்பினும் பொருளினும் வேறுபடவந்த கொச்சகங்களை யெல்லாம் ஒரு வரையறைப்படுத்துத் தாழிசை துறை, விருத்தம் என மூவகை இனமாக்கி, ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைச் செய்யுளோடும் உறழ்ந்து காட்டுவர் பின்வந்த யாப்பிலக்கண நூலாசிரியர் கள். அன்னேரால் ஒருபாவிற்கு இனமென வகுக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/81&oldid=745137" இலிருந்து மீள்விக்கப்பட்டது