பக்கம்:இசைத்தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*]ê போற்றுதலால், அவர் திருவாய் மலர்ந்தருளிய சத்தமலி செந்தமிழ்ப் பதிகங்கள் யாவும் கலிப்பாவின் வகையைச் சார்ந்தன எனத் தெளிவாகப் புலனுதல் காணலாம். இனி, வடநூல் வழித் தமிழாசிரியர் சிலர், இத் தமிழ்ச் செய்யுள் வகைகளுக்கு வடமொழி யாப்பிலக்கண மர பை அடியொற்றி லகு குரு என்னும் எழுத்தமைப்பினைக் கொண்டு புதிய இலக்கணங்களைக் கற்பித்துக் கூறியுள்ளார்கள். தமிழில் பிற்காலத்தவர் ஏற்றியுரைத்த இவ்விருத்த இலக் கணம் வடமொழி நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வீரசோழிய ஆசிரியர் தமிழில் ஒரளவு சுருங்கக் கூறி ឃុា தனிக்குற்றெழுத்தாய் வருவது லகு குற்ருெற்று, நெடில், நெட்டொற்று ஆக வருவது குரு. குற்றெழுத்து ஈற்றில் நின்ற நிலையிலும் விட்டிசைத்த நிலையிலும் குரு வாதலும் உண்டு. லகுவுக்கு ஓரலகும் குருவுக்கு இரண்ட லகும் கொள்வர். எனவே இரண்டுலகு கூடி ஒரு குருவாக மதிக்கப்படும் நிலையை அடைவதும் உண்டு. லகு, குரு என்னும் இவ்விரண்டினையும் வைத்து உறழ்தலினல் விருத்த பேதங்களைத் தோற்றுவிக்கலாம் என்பர். இவ்வாறு வடமொழி விதிகளே அடியொற்றி எழுத் தெண்ணி வகுக்கப்படும் செய்யுட்களைத் தமிழியல் முறைப் படி சீர்வகையாற் பகுத்து நோக்குமிடத்து அவற்றின் ஓசையும் சந்தமும் மேலும் பலவாய் விரிதல் காணலாம், இசைத்தமிழ் உருக்களாகிய தேவாரத் திருப்பாடல் களே அவற்றின் கட்டளை ஓசை வேறுபடாது வகைப்படுத்த வேண்டுமாயின், இசைத்தமிழில் ஆளத்தி செய்தற்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/83&oldid=745139" இலிருந்து மீள்விக்கப்பட்டது