பக்கம்:இசையமுது 1, 1984.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் பகுதி கோடாலிக்காரன் வெய்யில் தாழ வரச் சொல்லடி இந்தத் தையல் சொன்ன தாகச் சொல்லடி வெய்யில் தாழ வரச் சொல்லடி கையில் கோடாலி கொண்டு கட்டை பிளப் பாரைக் கண்டு கொய்யாக் கனியை இன்று கொய்து போக லாகும் என்று வெய்யில் தாழ வரச் சொல்லடி கூரைக்குப் பின்னால் இருக்கும் தென்னை - அதன் கூட இருக்கும் வளர்ந்த புன்னை நேரினிலே காத்திருப்பேன்! என்னை நிந்திப்பதில் என்ன பயன் பின்னை? வெய்யில் தாழ வரச் சொல்லடி தாய் அயலூர் சென்று விட்டாள் நாளை- சென்று தான் வருவாள் இன்று நல்ல வேளை வாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை- நாள் மாறி விட்டால் ஆசை எல்லாம் தூளே வெய்யில் தாழ வரச் சொல்லடி 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/12&oldid=1443327" இலிருந்து மீள்விக்கப்பட்டது