உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இசையமுது 1, 1984.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்கள் பகுதி

53


பெண்கள் கடன்

மேகலையும் நற்சிலம்பும் பூண்டு—பெண்ணே
வீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு!
போகவில்லை அகம்புறமும், நாலிரண்டும்; நெஞ்சம்
புகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிர்கொஞ்சும்

மேகலையும்...


தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய்—பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்
தடையினைக் காலினால் தேய்ப்பாய்!
கமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய்
தமிழர் மரபினை உன்னுயிர், என்பதைக் கண்டாய்.

மேகலையும்...


மூவேந்தர் கொடி கண்ட வானம்— இன்று
முற்றிலும் காண்கிலாய் ஏனும்
ஓஓஎ னப்பகை தானும்
ஓடவே காத்திடுக மானம்!
காவெலாம் தென்றலும் 
பூக்களும் விளையாடும் நாட்டில்
கதலியும் செந்நெல்லும்
பயனைப் புரிந்த மணி வீட்டில்
மேகலையும்...
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/54&oldid=1648064" இலிருந்து மீள்விக்கப்பட்டது