பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 23 —

அளவிற்கும், எதிர்க்கட்சிகளின் மேல் வெறுப்புக் கொள்ளுமாறும் சூழ்ச்சியாகப் பயன்படுத்திக் கொண்டனர். தமிழக மக்கள் தி.மு.க. மேல் முழு வெறுப்புக் கொள்ளுமாறு, அவர் மறைவை மிகைப்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல் ஓர் அச்சமும், வெறுப்பும் கொள்ளுமாறு கதைகள் பல கட்டியும், அதிகாரிகளை விட்டுத் தமிழீழ ஏதிலிகளையும், அவர்களுக்கு ஆதரவு தந்தோர்களையும், தருவோர்களையும் தேடிப்பிடித்து, ஏதோ அவர்களால்தாம் இராசீவ் இறந்தது போலப் பழி சுமத்தியும், அச்சுறுத்தியும், கொடுமைகள் பல செய்து துன்புறுத்தியும், தளைப்படுத்தியும் தங்கள் தேர்தல் வெற்றிக்காகப் பல உத்திகளைப் பயன் படுத்தி வெற்றிகளையும் பறித்துக் கொண்டனர்.

ஏற்ற இறக்கமாக இருந்த தில்லி நாடாளுமன்றத்தையும் பேராயம் தக்க வைத்துக் கொண்டது, தமிழகத்திலோ, பச்சைப் பார்ப்பனீயத் தலைமையில் அதற்குக் கட்டியங் கூறிய வீடண பிரகலாதன்கள் துணையுடன், இந்து மதத்திற்கும், பார்ப்பனர்களுக்கும் முழுநலந் தேடுகின்றபடி ஓர் அழுத்தமான ஆட்சி அமைந்தது. கால மாற்றங்களை முன் கூட்டியே உணரவும், காற்றடித்த பொழுதே தமிழ்க் கென்றும் தமிழர்க்கென்றும் ஓர் எள்ளின் மூக்கத்துணை நலமும் தேடவும் இயலாத கலைஞர் கருணாநிதி ஆட்சிக் கட்டிலிலிருந்து அப்புறப்படுத்தப் பெற்றார்.

பார்ப்பனீய ஆட்சிக் கொடுமைகள்!

ஆரியப் பார்ப்பனீயம் தமிழகத்தில் அமைத்த ஆட்சி, கடந்த ஐம்பதாண்டுக்காலத் தமிழர்களின் உள்ளுணர்வையும், முன்னேற்ற வளர்ச்சிகளையும் கிள்ளியெறிந்தும், வெட்டித் தகர்த்தும் பலவகைக் கரவான கொடுமைகளைச் செய்ய முற்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் முயற்சியும் இந்தியாவில் — குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பார்ப்பனர்க