பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


என்று மேற்கொண்டு ஒரு கேள்வியைப் போடுகிறது கட்டுரை. ராமசாமி ரெட்டியாரை எதிர்த்து நின்றவர் பிறிதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரல்லரென்பதையும் அவர் கட்சிக்காரரே அவரை எதிர்த்து நின்றாரென்பதையும் கட்டுரையாளர் குறிப்பிட்டு எழுதுகிறார். 'அவர் பொருத்தமானவரல்லலர்; அவரது கொள்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று' என்பதாக எதிர்த்து நிற்பவர்சார்பில் காரணங்கூறப்பெற்றிருந்தால் இந்நிலை ஏற்படடிருக்கப்போவதில்லை. கட்டுரையாளர் கூறும் முறையிலேயே அக்கட்டுரைப் பகுதியின் உட்கருத்தைக்காண்போம்:--

"நாடாளும் கட்சியிலே நல்லவர் என்று நாட்டு மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தலைவருக்கு. காரணமின்றி -- வெளியே பகிரங்கமாகக் காரணம் ஏதும் கூறப்படாத நிலையில்--போட்டி ஏற்பட்டிருக்கிறது. அவருடைய குணம் சந்தேகிக்கப்படவில்லை, அவருடைய திட்டம் தாக்கப்படவில்லை, மாற்றுத்திட்டம் எதுவும் தீட்டப்படவில்லை. என்றாலும், அவருக்குப்போட்டி--போட்டியா! அது ஏன்? "

கட்டுரையின் ஏனையபகுதி அன்றைய நடப்புகளையும் நிகழ்ச்சிகளையும் பற்றிய விளக்கமாகும். சட்டசபைக் காங்கிரஸ் கட்சியிலுள்ள சுயநல பிராமணக் கும்பலொன்றின் தந்திர சூழ்ச்சிகளும் "ஜாதிப்பித்துமே" இவ்வெதிர்ப்புக்குக் காரணமென்பதை எடுத்துக்காட்டு முகத்தான் அவ்விளக்கம் தரப்பட்டுள்ளது. ராமசாமி ரெட்டியார் வெற்றிபெற்றாரென்று அறிவிக்கப்பட்டவுடனடியாக நேரிட்டதாகக் கூறப்படும் நிகழ்ச்சியொன்றைப்பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். வெளியில் கூடியிருந்த மக்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டதும் " பிராமணர் (பார்ப்பனர்) என ஒழிக " முழக்கமிட்டனராம். இப்போட்டிக்குக் காரணமே பிராமணர்கள் தானென்பதை மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்களாகையால் தான், தேர்தல் முடிவு தெரிந்ததும் முழக்கமிடலாயினரென்று கட்டுரையாளர் கூறுகிறார், மக்கள் நினைத்ததும் சரியென்பதே அவர் கருத்து. பிராமணர்--பிராமணரல்லாதார் பிரச்னையை