44
முன் வைத்தே அப்போட்டி நிகழ்ந்ததென்றும் தெளிவுறுத்துகிரார். ஒமந்தூர் ரெட்டியார் கட்சியிலேயே ஒரு தனிக்கூட்டம் இருக்கிறதென்றும். ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அக்கூட்டத்துக்குக் கவலையில்லையென்றும் பிராமணர் ஆதிக்கத்துக்கு ஆதரவுதராத எத்தகையவரையும் பதவியிலிருந்து இறக்கி தங்களுக்குப் பயன்படக்கூடிய ஒருவரையே அவ்விடத்தில் அமர்த்துவது என்ற எண்ணம் படைத்தது அக்கூட்டம் என்றும் கட்டுரையாளர் கருதுகிறார். கட்டுரையின் முடிவில் "திராவிட ராமசாமி" யைப்பற்றிக் குறிப்பிடப்படுகிறது. "திராவிட ராமசாமி" என்றது ஈ. வெ. ராமசாமி நாயக்கரைத்தான். கட்டுரையாளர் கூறுகிறார்:--
பிராமணர்-பிராமணரல்லாதார் என்ற வேறுபாடு கருதாது அனைவருமே இந்தியத்தாயின் சேய்கள் என்பதாகக்கூறி பெருமகிழ்வும் பெருமிதமும் கொண்டு நின்ற ராமசாமி ரெட்டியார் போன்ற ஒருவருக்கு எதிர்ப்பு இருப்பதா என்று மனம் நைந்து வருந்துகிறார் கட்டுரையாளர்.
சட்டசபை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ இல்லையோ, பிராமண சமூகத்தைச் சேர்ந்தோர் அனைவரும் கட்டுரையில் கடிந்துரைக்கப்பட்டுள்ளனரென்பதாக அட்வகேட் ஜெனரல் தனது விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார். கட்டுரை முழுவதையும் படித்துப் பார்த்த எங்கட்கு இவ்விவாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. சட்ட-