பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால், ரஷ்யாவும், இங்கிலாந்தும் ஜெர்மனியைத் தோற் கடித்தால்? அது சாத்தியமே அல்ல. நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று ஃபூரர் எங்களுக்குக் கூறியுள்ளார் என்று அவன் தனது கால் விரல்களை உணர்ச்சியற்று வெறித்துப் பார்த்தவாறே பதிலளித்தான். வார்த்தைகளை மனப்பாடமாக உருப்போட் டுள்ள, எனினும் அநாவசியமான சிந்தனை களால் தன்னை அலட்டிக் கொள்ள முனையாத ஒரு மந்தமான மாணவனின் பதில்களைப் போலவே அவனது பதில்கள் இருந்தன. அந்த இளைஞனிடம் ஏதோ பொய்யான, நம்புதற்கேயரிய விதத்தில் ஒரு குரூரமான தன்மை குடிகொண்டிருந்தது. உண்மையிலேயே நேர்மையோடு அவன் கூறிய ஒரே விஷயம் இதுதான் : "* எனது' ராணுவ வாழ்க்கை இடையில் தடைப்பட்டுப்போனது குறித்து நான் வருந்துகிறேன். ஹிட்லரின் பிரசாரத்தினால் படுமோசமான அளவுக்குச் சீர் கெட்டுப் போயிருந்த இந்தக் கடைகெட்ட இளைஞன் மக்களைக் கொன்று தள்ளுவதில் சலிப்படையவே இல்லை, அவன் கொலை செய்வதிலேயே ஒரு ருசியை வளர்த்துக் கொண்டிருந்தான்; தனக்குப் பலியானவர்களின் ரத்தத்தை அவன் . இன்னும் போதுமாக' அளவுக்கு ருசி பார்க்கவில்லை. இப்போதோ அலன் இங்கு ஒரு கைதியாக நின்றான். கூண்டுக்குள் சிக்கிவிட்ட ரத்த வெறி பிடித்த வெருகுப் பூனையின் வேட்டையாடப்பட்டுவிட்ட பார்வையோடு எங்களைப் பார்த்தவாறே அவன் எங்கள் முன் நின்றான்; நிரந்தரமாகத் தீங்கற்றவனாகச் செய்யப்பட்டுவிட்ட ஒரு (கொலைகாரனாக நின்றான்; அவனது நாசித்துவாரங்கள், எங்கள்மீது அவன் கொண்டிருந்த குருட்டுப் பகைமை வெறியினால் விரிந்து கொடுத்தன. ஒரு சோவியத் போர்வீரரின் காவலின்கீழ் ஆறு சாதாரண ஜெர்மன் போர் வீரர்கள் கூடாரத்தை விட்டு வெளிவந்தனர்; அவர்கள் பைன்மர ஊசியிலைகள் விரிப்பாகப் பரந்து கிடந்த தரைமீது குந்தியமர்ந்தனர், அந்தக் கைதிகள் அப்போதுதான் பிடிபட்டிருந்தார்கள், அவர்களது யூனிபாரம் கோட்டுகள் அழுக்கடைந்திருந்தன; அவற்றில் தாறுமாறாக ஒட்டுத் தையல்கள் போடப்பட்டிருந்தன. அவர்களில் ஒருவன் தனது பூட்சின் பிதிர்ந்து தொங்கும் தோல் விழுந்து விடாது இருப்பதற்காக, தனது உள்ளங்காலைச் சுற்றி ஒரு கம்பியைக் கட்டியிருந்தான். அவர்கள் ஆறு நாட்களாகக் குளிக்கவில்லை. அவர்களது - பீரங்கிப்படை அதற்கான வாய்ப்பையே அவர்களுக்கு அளிக்க

வில்லை, அவர் களது சோர்ந்த முகங்களில் காய்ந்துபோன தூசிப்

100