பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்புறவான எனினும் விடாக்கண்டர்களான அந்த ரசிகர்கள் அவரை இங்கு முற்றுகையிட்டு விட்டனர்; ஆட்டோகிராப் கையெழுத்துக்களைச் சற்று நேரம் போட்டுக் கொடுத்த பின்னர்தான் அவர் தப்பிக்க முடிந்தது. இந்தச் சிறு நகரில் தங்கிச் செல்வது என்பதொன்றும் முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட காரியம் அல்ல என்பதை வலியுறுத்தியாக வேண்டும். நாங்கள் வெந்து புழுங்கினோம்; தாகமாகவும் இருந்தது. எனவேதான் நாங்கள் அங்கே சற்றுத் தங்கினோம். இதனை எவரும் முன்னதாகவே அறிந்திருக்கவோ, எங்களுக்காக எந்தத் தயாரிப்பையும் செய்திருக்கவோ, முடியாது. அந்த இளம் ஜப்பானிய வாசகர்களோடு ஏற்பட்ட இந்தச் சந்திப்பு முற்றிலும் திட்டமிடப்படாத, முற்றிலும் தானாக நிகழ்ந்த ஒன்றேயாகும். சகிப்புத் தன்மையின் சிறு சோதனையொன்று வெற்றிகரமான சாதனையாக மாறியதை நாங்கள் நிக்கோவிலேயே கண்டோம், ஷோலனோவின் படைப்புக்களை ரசிக்கும் ரசிகையான பள்ளி மாணவி ஒருத்தி, ஜப்பானிய எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பின்பேரில் அவர் ஜப்பானுக்கு விஜயம் செய்வதாக ஒரு பத்திரிகை மூலம் படித்தறிந்திருந்தாள், அவர் செல்லக் கூடிய உத்தேசமான மார்க்கமும் அதில் கூறப்பட்டிருந்தது; அதில் நிக்கோவும் சேர்க்கப்பட்டிருந்தது, நிக்கோவிலுள்ள புராதனமான கோயில், அயல்நாட்டுச் சுற்றுப் பயணிகள் அநேகமாக காணத் தவறிவிடாத காட்சித் தலங்களில் ஒன்றாகும் என்பதை அறிந்திருத்த அவள், அந்த எழுத்தாளரின் கையெழுத்தைப் பெற்றுவிடும், நம்பிக்கையோடு அதன் வாசலில் காத்திருக்கத் தீர்மானித்தாள். ஐந்து மணிநேரம் காத்திருந்த பின்னால், அவள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினாள்; என்றாலும் அவள் காத்திருந்தாள், அவளது பொறுமைக்குப் பயன் கிட்டியது. அவள் பெரிதும் திக்குமுக்காடும் அளவுக்கு, பத்திரிகை நிருபர்கள் அவளைப் பேட்டிகள் கண்டனர்: ஷோலகோவுடன் சேர்த்து அவளைப் படமும் பிடித்தனர், இந்தப் புகைப் படங்கள் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளி வந்தன; அவற்றில் ஒன்றில் அந்த யுவதி - தான் எந்தக் கையெழுத்துக்காக அத்தனை நேரம் காத்துக் கொண்டிருந் தாளோ, அந்தக் கையெழுத்தை வாங்கிக் .. கொண்டிருக்கும் - காட்சி இடம் பெற்றிருந்தது. ஏனைய பல சந்தர்ப்பங்களையும் போலவே இந்தச் சந்தர்ப் பத்திலும், எங்களோடு வந்திருந்த மொழிபெயர்ப்பாளர்கள்

எங்களுக்கு இன்றியமையாதவர்களாக விளங்கினர்; அவர்களைப்

3