பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டார்--கிராண்டு ஹோட்டல் மண்டபத்தில் இதற்கு முன் என்றுமே இத்தனை பத்திரிகையாளர்கள் கூடியதே இல்லை.” ஸ்வீடிஷ் வாசகர்களின் கவனத்துக்கு ஷோலகோவின் படைப்புக்களைக் கொண்டு வருவதில் எவ்வளவோ பணியாற்றி யுள்ள டிடென் பதிப்பகத்தார் ஏற்பாடு செய்திருந்த வரவேற்புக் கூட்டத்தில், அந்தப் பதிப்பகத்தின் ஜெனரல் டைரக்டரான பெங்ட் கிறிஸ்டெல், அந்த எழுத்தா ளரைப் பின்வரும் வாசகங் சுளால் வாழ்த்தி வரவேற்றார், உங்கள் நூல்களை வெளியிடுவோர் என்ற முறையில் உங்களோடு இருப்பதில் நாங்கள் பசிழ்ச்சியுறுகிறோம்; எனினும் உங்களது புத்தகங்களை நாங்கள் விற்பனை செய்கிறோம் என்பது 1.மட்டுமே அதற்குக் காரணம் அல்ல....... உண்மையான, எதார்த்த பூர்வ மான ஒரு மாபெரும் கலைக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது; எனவே தான் நாங்கள் இன்று மகிழ்ச்சியடை கிறோம்.” <<டான் நதி பற்றிய தமது காவியப் படைப்பில் ரஷ்ய மக்களது வாழ்வின் ஒரு வரலாற்று ரீதியான சகாப்தத்தை அவர் எத்தகைய கலா வலிமையோடும் சத்தியத் தன்மையோடும் வருணித்துள்ளாரோ அவற்றுக்காகலே”'ஷோலகோவுக்கு நோபல் பரிசு வழங் கப்பட்டது . ஸ்வீடிஷ் அகாடமியின் நோபல் பரிசுக் கமிட்டியின் தலை வரான டாக்டர் ஆண்டர்ஸ் ஆஸ்டெர்லிங், கச்சேரி மண்டபத் தில் நடந்த பரிசு வழங்கு விழாவின்போது ஆற்றிய தமது உரையில், டான்: நத அமைதியாக ஓடுகிறது, என்ற நா வலில் கோஸாக்கு க ளின் வாழ்க்கையை வருணிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ள உள்ளங் கவரும் எதார்த்தவாதத்தைக் குறித்தே பேசினார். அது சகல விதத்திலும், சக்தி மிக்க ஒரு படைப்பாகும். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற வெற்றியாளர்களின் பட்டியலை, தற்காலத்தின் தனிச் சிறப்புமிக்க எழுத்தாளர்களில் ஒருவரின் பெயரை அதில் சேர்த்து அதனை வளப்படுத்தும் இந்தப் 2.ரிசு காலதாமதமாக,-எனினும் அதிருஷ்டவசமாக மிகவும் கால தாமதமாக இல்லாமல்--வந்துள்ளது என்று கூறினார் அவர், பின்னர் அவர் ஷோலோகோவின் பக்கம் திரும்பி இவ்வாறு கூறினார்: இந்தப் பரிசு சோவியத் இலக்கியத்துக்குத் தாங்கள் ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பணிக்கு, எங்கள் நாட்டிலும், அதேபோல் 2.லகம் முழுவதிலும் நன்கு பிரபல மாகி 44ள்ள Lணிக்கு வழங்கப்படும் நியாயமான, நன்றியுணர்வு

மிக்க 1, பாராட்டாகும்.

5