பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டால், உங்களது படைகளின் வலிமை மிக்க குத்துக்கள், எங்கள் நாட்டின் மீது படையெடுத்துள்ள எதிரியின் முதுகில் பாய்வதையேனும் நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம், உங்களது விமானப் படை நமது பொது எதிரியின் தொழில் துறைக் கேந்திரங்களின்மீது மிகவும் பயன் மிக்க முறையில் குண்டு வீசித் தாக்கி வருகிறது என்பதை நாங்கள் அறிவோம். என்றாலும், போரில் நல்லவிதமாகப் போரிட வேண்டுமென்றால், அதில் எல்லாப் படைகளும் சேர்ந்தாக வேண்டும். எங்கள் மக்களை யும் உங்கள் மக்களையும் தீராத கடும் பகைமையுணர்ச்சி யோடு பகைத்துவரும் ஒரு வலிமையும் தந்திரமும் மிக்க எதிரியை நாம் எதிர்நோக்கியுள்ளோம். இந்த யுத்தத்தில் எவரும் தமது கரங்களை ரத்தத்தில் நனைக்காமல் இதிலிருந்து மீண்டு கரையேற முடியாது. யுத்தம் ரத்தத்தையும் வியர்வையும் கோருகிறது. அவற்றை வழங்க மறுத்தால், அது வாங்கும் பலி இரட்டிப்பாகி விடும், தயக்கம் ஈடுசெய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். உங்கள் உறவினர்களின் ரத்தத்தை உங்கள் வீட்டு வாசற்படியில் நீங்கள் இன்னும் கண்டதில்லை. நான் கண்டிருக்கிறேன். எனவே இத்தனை பட்டவர்த்தனமாக உங்களிடம் பேசும் உரிமையை நான் பெற்றிருக்கிறேன். 1943 வரலாறு என்றுமே கண்டறியாத அத்தகைய வெற்றி - (கட்டுரைப் பகுதி) ... உலக வரலாற்றில் எந்தவொரு போருமே, 1941-1945 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தப் போரைப்போல் இத்தனை ரத்த பயங்கரமாகவும், படு நாசகரமாகவும் இருந்ததில்லை; அதேபோல் உலகில் எந்தவொரு ராணுவமும், எங்களது செஞ்சேனை பெற்றது போன்ற அத்தகைய அற்புதமான (வெற்றி களை என்றுமே பெற்றதில்லை; இதனைப்போல் கீர்த்தி, வலிமை, மகத்துவம் ஆகியவற்றின் இத்தகைதொரு பேரொளியில் குளித்தெழுந்து, மனிதகுலத்தின் வியந்து போற்றும் கண்களுக்கு முன்னால் இவ்வாறு காட்சியளித்ததும் இல்லை. " எங்கள் படைகள் கிழக்குப் பிரஷ்ஷியாவில், எய்த்குனென் என்ற இடத்தைக் கைப்பற்றியபோது, அந்நகரின் ரயில்வே நிலையக் கட்டிடம் சுவரில் எழுதப்பட்டிருந்த பெர்லினுக்கு இன்னும் 7 41, 7 கிலோமீட்டர் தூரம்” என்ற ஜெர்மன்

வாசகத்தை அடுத்து, ரஷ்ய மொழியிலும் ஒரு வாசகம் எழுதப்

135