பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரை முடுக்கும் போதுதான் அவர் கூட்டத்தை விட்டுக் கிளம்பி வருகிறார்; மற்றப்படி அவர் இப்போது கிராம் சோவியத் அலுவலகத்திலேயே வாழ்ந்து வருகிறார்; உண்ணுவதும் உறங்கு வதும் கூட அங்கேயேதான், அவரது வயதான மனைவி அவருக்குச் சாப்பாட்டுக்காக ஒரு பானை நிறைய முட்டைக்கோஸ் சூப் கொண்டு வருகிறாள்; ஆனால் பனிப் படிவத்தையெல்லாம் கடந்து நடந்து அவள் இங்கு வந்து சேர்வதற்குள் மணிக்கணக் காகி விடுகிறது. எனவே மிக்கி ஃபோமிச் பனிக் குளிராய்க் குளிர்ந்து போன சூப்பில் கொஞ்சத்தை மட்டும் கரண்டியினால் அள்ளிக் குடிக்கிறார்; பிறகு மீண்டும் கூட்டத்திலேயே ஈடுபட்டு விடுகிறார்; இவ்வாறு அவர் சுலரில் அறைந்த ஆணியைப் போல் கிராம் சோவியத்திலேயே ஒட்டிக் கொண்டு கிடக்கிறார்,... கடவுளே! அவர் தான் எத்தகைய செயல் வீரராக மாறி விட்டார்! - - , ** அவர் ஒரு கூட்டுப் பண்ணைச் செயல் வீரரா?" - ' 45 யார், மிக்கி ஃபோமிச்சா? ஏன், அவரும் ஒரு செயல்வீரர் தான்; ஆனால் எதிர்த் தரப்புச் செயல்வீரர். அந்தப் பணக்கார மத்தியதர விவசாயிகளில் அவரும் ஒருவர், கூட்டுப் பண்ணையை எதிர்த்து அவர் பேசுவதில்லை. ஆம், அவ்வாறு பேசுவதில்லை. ஆனால், அவர் வெறுமனே பின் வரிசையில் அமர்ந்து கொண்டு, விஷமத்தனமாக எதையாவது சொல்லிக் கொண் டி ருப்பார்; பைபிளிலிருந்து எதையாவது அல்லது தாமாகவே இட்டுக் கட்டிய எதையாவது சுட்டிக் காட்டிக் கொண்டி ருப்பார். அன்றொரு நாள் அந்தக் கூட்டங்கள் ஒன்றுக்கு நானே சென்றிருந்தேன். அங்கு எல்லோரும் பெஞ்சுகளில் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நான் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்; எனக்கு அடுத்தாற்போல் இதே மிக்கி ஃபோமிச் உட்கார்ந்திருந்தார், அவருக்கு அடுத்தாற்போல், ஒரு - விதவை-பெயர் எஃப்ரோசின்யா மெல்னிக்கோவா-அவள் உட்கார்ந்திருந்தாள். மிக்கி ஃபோமிச் ஏதேதோ சளசளத்துக் • கொண்டிருந்தார்; இதனால் நாங்கள் பேச்சாளர்கள் கூறுவதைக் - கேட்க முடியவில்லை. இந்த எஃப்ரோசின்யா மெல்னிக்கோவா அவுரை' வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கும்படி மிகவும் 2.வ்வியமாகக் கேட்டுக் கொண்டாள்; பிறகு மீண்டும் ஒருமுறை அவ்வாறே கேட்டுக் கொண்டான்; ஆனால் அவரோ சளசளத்துக் கொண்டே இருந்தார். பேச்சாளர் வட்டாரக் கேந்திரத்திலிருந்து வந்திருந்த கட்சி நபர், அவர் கூட்டுப் பண்ணைகளைப்பற்றி எங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால்

மிக்கி ஃபோமிச் தமது சொந்தப் பேச்சை நிறுத்தவில்லை; இது

146