பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயலார் ஒருவரிடம் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் அவள் உடனே பதிலளித்தாள்: - என் அருமை விருந்தாளியே, எங்களிடம் என்ன பண்ணை இருக்கிறது? எங்கள் பண்ணைத் தொழிலெல்லாம் முடிவு கண்டு விட்டதாகவே தோன்றுகிறது. இப்போது இங்கு காற்றுத்தான் தொடர்ந்து ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. எங்களிடம் மிஞ்சியிருப்பதெல்லாம், இரண்டு ஆடுகளும், இதோ இந்தச் சின்ன ஆட்டுக்குட்டியும்தான், எங்களிடமிருந்த நாயும்கூட, எங்களது கா லியான முற்றத்திலிருந்து ஓடிப்போய் விட்டது ; இங்கு காவல் 'காப்பதற்கு அதற்கு இனியும் ஏதும் இல்லை. முனகிக் கொண்டும், ஈழை மூச்செறிந்து கொண்டும் அவள் எழுந்து உட்கார்ந்தாள்; காலுறை தரித்த தனது கால்களைக் கணப்பு அடுப்பின் பக்கவாட்டில் தொங்கவிட்டுக் கொண்டாள்;. பின்னர் விளக்கின் சிம்னிக்குள் எரியும் . மஞ்சள் நிறமான சுடரைத் தனது கண்களை நெருக்கிச் சுருக்கிப் பார்த்தவாறே மேலும் தொடர்ந்து பேசினாள்; '.' - "கடவுள் . அறியச் சொல்கிறேன். எனது கிழட்டுக் கணவர் இப்போதெல்லாம் அவராகவே இல்லை, அவர் தூக்கமே இல்லா மல் தவிப்பது இது நாலாவது; இரவு . இரவில் அவர் படுக்கப் போ வார்; கொஞ்ச நேரம் படுத்துக் கிடப்பார்; பிறகு அவர் எழுந்திருந்து விளக்கை ஏற்றுவார்; மேஜை முன் அமர்வார்; ஒரு பெரிய சிகரெட்டைத் தாமே சுருட்டித் தயார் செய்வார்; " அதனைப் புகைத்துக் கொண்டே , இரவு பூராவும் எதுவுமே கூறாமல் , அங்கேயே அமர்ந்திருப்பார். அவரது குரல் கூட எனக்கு மறந்து போய் விட்டது. காலையில் பார்த்தால், வீடெல்லாம் ஒரே புகை. மண்டிக்கொண்டிருக்கும். நம்பினால் நம்புங்கள். அந்தப் புகையினால் என் தலையே கிறுகிறுத்துப் போய் விடும். நான் மூச்சு விடுவதற்கே திணறுவேன். ஆனாலும் நான் அவரிடம் எதுவும் சொல்லத் துணிவதில்லை; அவர் என்னை மிருகத்தன மாக வெறித்துப் பார்ப்பார்; பிறகு கதவைத் தடாரென்று. சாத்திவிட்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல்' முற்றத்துக்குப் போய் விடுவார்.” - ரஷ்ய விவசாயிப் பெண்கள் எல்லோருக்கும் பொதுவான அந்த அனாதிகால பாவனையோடு அவள் தன் மோவாயைத் தன் கையைக் குவித்து , ஏந்திக் கொண்டு, வருத்தத்தோடு இவ்வாறு கூறினாள்: ” “'இவர் - சென்ற நான்கு நாட்களாகச் சரியாகவே சாப்பிடவில்லை, இவர் சாப்பாட்டுக்கு உட்காருவார்; கரண்டியையும் கையில் எடுப்பார்; -- பிறகு மீண்டும் . அதனைக்

கீழே வைத்து விட்டு, தமது. மறுகையினால் புகையிலைப் பையை

156