பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்பவில்லை, இலக்கியம் பொதுவான பாட்டாளி வர்க்க லட்சியத்தின் பகுதியாக மாறி விட்டதால், நான் பேச விரும்புவது இலக்கியத்தைப் பற்றித்தான். வென்ஜாவோடும், ராஸ்தாவ் ரயில்வே ஜங்ஷனும் பத்திரிகைகளுக்கு முறையாக எழுதி வரும் ஏராளமான பேர்களைக் கொண்டுள்ளது-ஏறத்தாழ அவர்கள் அறுநூறு பேர்கள் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். மொத் தத்தில் தொழில்துறைக்கும், குறிப்பாக உங்களது தொழிற்சாலை மற்றும் ரயில்வே ஆகியவற்றுக்கும் குறைபாடுகளைப் போக் கத் தமது பேனாவினால் உதவி வரும் இந்தத் தொழிலா ளி, நிருபர்கள் மத்தியிலிருந்து, எங்களையும் முந்திக் கொண்டு, எங்களை மிகவும் பின்தங்கி விடவும் செய்யக்கூடிய, தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர்களும் கவிஞர்களும் டஜன் கணக்கில் தோன்றுவர் என்று நான் ஆழமான திட நம் பிக்கை கொண்டுள்ளேன். காங்கிரசின் முன்னால் தொடங்கப் பெற்ற மொழி பற்றிய விவாதமானது, பத்தாண்டுகளுக்கும் குறைவான முந்திய காலத் தோடு, 1926-27 ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தொழி லாளி வாசகர்கள் மிகப் பெரும் முன்னேற்றங்களை எய்தி யுள்ள னர் என்பதையும், நடை விஷயத்தில் அவர்கள் குறிப்பாக மிகவும் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர் என்பதையும், எழுத்தாளர்களான நாங்கள் அவர்களது தேவைகளைப் பல சமயங்களில் பூர்த்தி செய்யத் தவறி விடும் அளவுக்கு, அவர்கள் நூல்களை வாசிப்பதில் அத்தகைய ரசனைச் சுவையை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையும் புலப்படுத்தியது. இங்கு நான் கூற விரும்புவ து இதுதான்: தொழிலாளி வர்க்கத்தின் கலா சாரத் தரம் மிகப் பெரும் அளவில் உயர்ந்துள்ளது என்பதைக் கருதிப் பார்க்கும்போது, அவர்கள் எங்களுக்கு எழுதும் கடிதங் களிலும், சஞ்சிகைகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கும் விமர்சனக் கட்டுரைகளிலும், கூட்டங்களில் அவர்கள் பேசும் பேச்சுக்களிலும், தொழிலாளர்கள் மிகவும் தரமுயர்ந்த நூல் களையே அத்தியாவசியமான பிரச்சினையாகக் கொண்டு பேசு வதையும் கருதிப் பார்க்கும்போது, இலக்கிய விவாதங்கள்- விவாதங்கள் என்றால் பொதுப்படையான அர்த்த பாவத்தில் அல்ல; மாறாக, சோவியத் இலக்கியத்தின் தலையாய படைப் புக்கள் என்று இந்தத் தருணத்தில் கருதப்பட்டு வரும் புத்தகங் களைப் பற்றிய விவாதங்கள்-முக்கியமாக சில எழுத்தாளர் அளுக்கும், எங்களது வாசகர்களான உங்களுக்கும் மிகமிகப் பயன் மிக்கதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

228

228