பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் மற்றும் உலக உழைக்கும் பொதுமக்களின் பிரத்தியேகமான கவனத்தைப் பெற்றிருந்த சோவியத் எழுத்தாளர் காங்கிரஸ், இன்று வரையிலான நமது சாதனைகளைத் தொகுத்துக் கூறியது. உலக இலக்கியத்தைப் பிரித்துக்காட்டும் எல்லைக்கோடு அந்தக் காங்கிரசில் மிக வும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டது என்பதைக் கூறியாக வேண்டும். மேலும் தமது சோவியத் இலக்கியம் இடையறாது உயர்ந்து வருவதற்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் ஏகமனதாகக் குறிப்பிட்ட முதலாளித்துவ இலக்கியத்தின் சீரழிவுக்கும் அங்கு சான்றுகள் வழங்கப்பட்டன, மேலை நாட்டில் கலையின் சீரழிவைச் சுட்டிக் காட்டும் உதாரணங்கள் எதையும் நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை; ஏனெனில் நமது தினசரிப் பத்திரிகைகளில் உங்களுக்குத் தேவையான உதார ணங்கள் அனைத்தையும் நீங்கள் காணமுடியும், பாசிஸ்டு நாடுகளில் புத்தகங்கள் எரிக்கப்படுகின்றன என்பதயும், ஆஸ்திரிய அரசாங்கத்தின் புதிய சட்டத்தின்கீழ் ஆயிரக்கணக்கான புத்த கங்கள்-அவற்றில் சோவியத் எழுத்தாளர்களது நூல்களின் மொழிபெயர்ப்புக்களும் உண்டு-அழிக்கப்படவிருக்கின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள், காங்கிரசில் சீன நாட்டு நூலாசிரியை பேசிய பேச்சிலிருந்து, தமது பூமிகப் பரந்த நாட்டை அடிமைப்படுத்துவோருக்கு எதிராகப் போராடுமாறு தொழி லாளிகளும் விவசாயிகளுமான' வெகுஜனங்களுக்கு அறை கூவல் விடுக்கும் சீனப் புரட்சிகர எழுத்தாளர்களின் நூல்கள், அவர்களுக்குத் தண்டனை வழங்கும் விதத்தில் நூலகங்களிலிருந்து வெளியே தூக்கி வீசி எறியப்பட்டுள்ளன என்பதையும், இதற்கும் மேலாக, இந்த எழுத்தாளர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர், தூக்குமரத்தில் தமது உயிரை இழக்கின்றனர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். காங்கரசில் மிகவும் துடிப்பாகப் புலப்படுத்தப்பட்ட இந்த எல்லைக்கோடு, கலைத்துறையில் இரு உலகங்கள் ஒன்றுக் கொன்று எதிரும் புதிருமாய் மோதி நிற்கின்றன என்பதையே காட்டுகிறது - மேலும் நமது சோவியத் இலக்கியம் உலகில் எங்களும் வெற்றி கஸ்டு வருகிறது என்பதும் இப்போதே முற்றிலும் தெளிவாகி யுள்ளது. இதற்குக் காங்கிரசில் பேசிய மேற்கு ஐரோப்பிய எழுத்தாளர்களே, மிகவும் குறிப்பாக, ஜெர்மானியக்கம்யூனிஸ்டு எழுத்தாளரான பிரான்ஸ் வீஸ் காஃப் சான்று பகர்ந்தனர். Lr:ாசிஸ்டு ஆதிக்கத்தின் கீழ் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெர்மானியப் பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தின் அர்த்தத்தையும், உலகப் புரட்சியும் உலகில் எங்கணும் கம்யூனிசத்தின் உன்னதமான லட்சியங்களும் வெற்றி

229

229