பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுவதற்கு, எதிரிகளை எதிர்த்து எவ்வாறு போராட வேண்டும் என்பதையும், சோவியத் எழுத்தாளர்களின் படைப்புக் களிலிருந்தே கற்றுக் கொள்கிறது என்று அவர் கூறினார்; வீஸ் காஃப் மேலும் கூறுகையில், விவசாயிகளைப் பற்றிய சோவியத் ஆசிரியர்களின் நூல்களிலிருந்துதான், நாயை நாய்! அடித்துத் தின்னும் மனப்பான்மையைக் கொண்ட சிறு தனியார் பண்ணைத் தொழிலுக்குப் பதிலாக, பெருமளவிலான கூட்டுப் பண்ணைத் தொழிலைப் புகுத்துவதற்கு, நமது கட்சியும் நமது தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளில் முற்போக்கான பகுதியினரும் எத்தகைய போராட்டத்தை நடத்தினர் என்பதை ஜெர்மானிய வாசகர்கள் கற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். - இந்தக் கூட்டத்தில்-இதுவே கடைசிக் கூட்டமாக இராது என்று நான் நம்புகிறேன்.---நாம் வாசகர்-எழுத்தாளர் உறவுகள் சிலவற்றை நிறுவவும், இன்று வரையில் தீர்க்கப்படாது இருந்து வரும் சில பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவவும் முடிந்தால், அது ஒன்றும் நிச்சய மா க மோசமாக இராது. பான்ஃபெரோவின் புருஸ்கி சம்பந்தமாகத் தொடங்கிய: இலக்கிய மொழி பற்றிய விவாதம் எங்களது பலவீனமான அம்சங்களை வெளிக்காட்டியது; முக்கியமான கருப்பொருளின் பால் நாங்கள் காட்டும் ஆர்வத்திலும், எங்களது நூல்களில் நமது வியக்கத்தகும் சகாப்தத்தைப் பிரதிபலிக்க எங்களுக்குள்ள விருப்பத்திலும், நாங்கள் பல சமயம் தரத்தைப் பற்றி மறந்து விடுகிறோம், தரக்குறைவான படைப்புக்களையும் படைக்கிறோம் என்பதையும் அது அம்பலப்படுத்தியது. கார்க்கி இவ்வாறு முற்றிலும் சரியாகவே சொன்னார்: தொழில் துறையில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள ஒரு தொழிலாளி மோசமாக வேலை பார்த்து, உதவாக்கரையான பொருளை உற்பத்தி செய்தால், அது குற்றமாகக் கருதப்படுகிறது; பத்திரிகைகளில் அவர் அவமானத்துக்குள்ளாக்கப்படுகிறார்; பொதுஜன அபிப்பிராயத் தால் கண்டிக்கப்படுகிறார். அப்படியிருக்கும்போது, தரக்குறை வான சரக்குகளை உற்பத்தி செய்யும் ஓர் எழுத்தாளரின் விஷயத்தில் மட்டும் நாம் ஏன் ஒரு லேசான விமர்சனக் குட்டு குட்டுவதோடு, எந்த விதத்திலும் எழுத்தாளர்களுக்கு உறைக்காத ஒரு தண்டனையோடு, நிறுத்திக் கொள்கிறோம்? நமது படைப்பு விஷயத்தில் மிகவும் சிரமம் எடுக்கக் கூடிய, எனினும் எடுக்க வேண்டாத, ஓர் எழுத்தாளர் விஷயத்தில், மேலும் வலுவான நடவடிக்கைகளை நாம் ஏன் மேற்கொள்வ

தில்லை ?”

230